விக்ரமின் 'வீர தீர சூரன் 2' படம் பாக்ஸ் ஆபிஸை நெருங்கியதா? மொத்த வசூல் விவரம் இதோ

By subhashini · 13/4/2025

வீர தீர சூரன் 2 படத்தின் மொத்த வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்து இருக்கிறது./ அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் வீர தீர சூரன் 2. இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி இருக்கிறார்.

இந்த படம் HR Pictures தயாரித்து இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வெளியாக பல பிரச்சனைகள் வந்தது. பின் இந்த படத்தின் ரிலீஸ்க்கு திடீரென்று தடை விதிக்கப்பட்டது. பின் அந்த பிரச்சனையை ஒரு வழியாக முடித்து வீர தீர சூரன் 2 படம் வெளியிடப்பட்டது.

வீர தீர சூரன் 2:

லேட்டாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் 370 தியேட்டர்கள் வீர தீர சூரன் 2 படத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு கோடியே 4 லட்சத்து 18 ஆயிரம் வசூல் செய்தது. இப்படி இருக்கும் நிலையில் வீர தீர சூரன் 2 படத்தின் உடைய மொத்த வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வீர தீர சூரன் 2 பட மொத்த வசூல்:

தற்போது அஜித் நடித்த குட் பேட் அட்லி படம் வெளியாகி இருப்பதால் வீர தீர சூரன் படம் எல்லா திரையரங்கிலும் வாஷ் அவுட் செய்திருக்கிறார்கள். இதுவரை இந்த படம் 52 கோடி வரை வசூலித்தது என்று தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றியை பெறாமல் வீர தீர சூரன் படம் தப்பித்து இருக்கிறது. ஒருவேளை குட் பேட் அட்லி படம் வெளியாகாமல் இருந்தால் கண்டிப்பாக இந்த படம் 100 கோடி வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

படத்தின் கதை:

படத்தில் எஸ். ஜே சூர்யா காவல்துறை அதிகாரியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பழைய பகையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரவி மற்றும் கண்ணன் வேண்டும் இருவரையுமே என்கவுண்டர் செய்ய திட்டம் போடுகிறார். பெரிய தாதாவாக ரவி இருக்கிறார். இவருடைய மகன் தான் கண்ணன். ரவி தன் மகன் கண்ணனை இவரை எப்படியாவது எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று விக்ரமிடம் உதவி கேட்கிறார்.

விக்ரமை வைத்து எஸ்.ஜே சூர்யாவை கொன்று விட்டால் தன்னுடைய மகனை காப்பாற்றி விடலாம் என்று தாதா ரவி நினைக்கிறார். விக்ரமும் இது தெரியாமல் ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் விக்ரமும் நடந்தது? விக்ரம் எதற்காக தாதா ரவி சொன்னதற்கு ஒத்துக்கொண்டார்? எஸ்.ஜே சூர்யா ஏன் ரவி மற்றும் கண்ணனை கொல்ல நினைக்கிறார்? இவர்களுடைய பின்னணி என்ன? என்பது தான் படத்தினுடைய மீதிக்கதை.

behindtalkies AMP · Quick view
View full