முன்னாள் மனைவி விவகாரம்: கண்ணீருடன் வீரம் பட நடிகர் பாலா வெளியிட்ட வீடியோ - நடந்தது என்ன?

By subhashini · 27/5/2026

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை.

அதனால், இவர் மலையாள மொழிக்குச் சென்று விட்டார். பின் சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் அஜித்தின் ‘வீரம்’ படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து இருந்தார். இருந்தும் இவரால் தொடர்ந்து தமிழ் மொழி படங்களில் நடிக்க முடியவில்லை. அதன் பின் இவர் மலையாள படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை 2010 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாலா குறித்த தகவல்:

இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் கொண்டார். பின் சில காரணங்களால் 2019 ஆம் ஆண்டு அம்ருதாவை பாலா விவாகரத்து செய்தார். இதற்கு இடையே பாலா கொடுத்த சில பேட்டிகளில் மகள் அவந்திகா குறித்து நிறைய பேசி இருந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பாலாவின் மகள் அவந்திகா வீடியோ வெளியிட்டார். இதை அடுத்து கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் தனது தாய்மாமன் மகள் கோகிலா என்பவரை பாலா மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

பாலா முதல் மனைவி சர்ச்சை:

திருமணத்திற்கு பின் பாலாவும் அவருடைய மனைவி கோகிலாவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் பாலா தனக்கு அடிக்கடி தொந்தரவு, பிரச்சனை தருவதாக அவருடைய முதல் மனைவி புகார் அளித்திருந்தார். அதற்கு பாலாவும் பதிலடி கொடுத்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் பாலா எமோஷனாக பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, மீண்டும் மீண்டும் பணம் கேட்டு என்னுடைய முன்னாள் மனைவி தொந்தரவு செய்து வருகிறார்.

View this post on InstagramA post shared by Filmactor Bala (@actorbala)

கண்ணீருடன் பேசிய பாலா:

என்னிடம் இருந்த 10 லட்சம் ரூபாய் என்னுடைய மகள் பெயரில் எப்டி போட்டுவிட்டேன். இப்போது மீண்டும் என்னுடைய முன்னாள் மனைவி 120 கோடி ரூபாய் கேட்கிறார். எல்லா பிரச்சனைகளையும் நான் உள்ளே வைத்திருக்கிறேன். இனி யாராவது பேசினால் நான் எல்லா உண்மைகளையும் பிரஸ்மீட் வைத்து சொல்லி விடுவேன். உண்மை வெளிவரக்கூடாது என்றால் என்னையும் என் மனைவியையும் விஷம் வைத்துக் கொண்டு விடுங்கள் என்று கண்ணீருடன் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full