தங்க மாலை, 600 சவரன் நகை, நெல்லையே அசர வைத்த நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தியின் திருமணம்

By subhashini · 28/11/2024

பிரம்மாண்டமாக வேலராமமூர்த்தி பேத்தியின் திருமணம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளர், நடிகராக இருப்பவர் வேல ராமமூர்த்தி. இவர் இலக்கிய வட்டாரத்தில் பிரபலமாக இருந்தவர். அதற்குப்பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த கிடாரி, கொம்பன் போன்ற படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியிருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் குணச்சித்திர வேடங்களில் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் கலக்கி கொண்டு வருகிறார். அதேபோல் இவர் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார்.

வேலராமமூர்த்தி குறித்த தகவல்:

தற்போது இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வேலராமமூர்த்தி பேத்திக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. நெல்லையை சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ் முருகன். இவருடைய மகனுக்கும், பிரபல நடிகர் வேலராமமூர்த்தி பேத்தி வைஷ்ணவி ஆகியோருக்கும் தான் நெல்லையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் இவர்களின் திருமணம் குறித்த செய்தி தான் ஹாட் டாபிக்கே.

https://www.youtube.com/watch?v=gke3ZETVu8k

வேலராமமூர்த்தி பேத்தி திருமணம்:

இவர்கள் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இருந்தும் இந்த பிரம்மாண்ட திருமணத்தை பற்றி தான் அதிகமாக பேசுகிறார்கள். குறிப்பாக, மணமக்கள் அணிந்திருந்த மாலை முழுவதுமே தங்கப் பூவால் செய்யப்பட்டு இருந்தது. இதுதான் பலரையுமே ஆச்சரியப்படுத்தி இருந்தது. அதேபோல் மணமகள் தன்னுடைய தலையில் தங்கத்தால் ஆன முல்லை பூவை சூடி இருந்தார். அவர் அணிந்திருந்த அனைத்து நகைகளும் முழுக்க முழுக்க தங்கத்தினால் ஆனது.

திருமணம் குறித்த தகவல்:

மணமகள் வைஷ்ணவி திருமணத்தின்போது கட்டிருந்த புடவையின் மதிப்பு மட்டுமே சுமார் 8 லட்சம் என்றும் கூறப்படுகிறது. அதற்கு அவர் மேட்சிங் ஜாக்கெட் மட்டும் 3 லட்சம் என்று சொல்லப்படுகிறது. திருமணத்தில் மணமகளுக்கு கிட்டத்தட்ட 600 சவரன் நகை சீராக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஒரு திருமண மண்டபத்தையே செட்டாக அமைத்து திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். அதே போல இந்த திருமணத்தில் பல்வேறு கிராமிய கலைகளும் நடத்தப்பட்டிருந்தது.

திருமணத்தில் உள்ள ஸ்பெஷல்:

இதில் பாடகர்கள் எஸ்பி சரண், சைந்தவி, சூப்பர் சிங்கர் பாடகர்கள் என பலர் பாடி இருந்தார்கள். சுமார் 25,000 பேருக்கு மேல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கேட்டரிங் வேற யாரும் இல்லை மாதம்பட்டி ரங்கராஜ் தான். இந்த திருமணத்தில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஆர்.எஸ் முருகன் இந்த திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full