'கொட்டுக்காளி' ரொம்ப சுமாரான படம் தான், அதை ஏன் இப்படி கொண்டாடுறாங்கன்னு தெரியல- வலைப்பேச்சு அந்தணன்

By Rajkumar · 24/8/2024

நடிகர் சூரியின் கொட்டுக்காளி படம் குறித்து, பத்திரிக்கையாளர் அந்தணன் விமர்சித்து இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறார் சூரி. சமீப காலமாக இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. தற்போது சூரியன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கொட்டுக்காளி'.

இப்படத்தை இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'கூலாங்கல்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுக்களை பெற்று இருந்தது.

கொட்டுக்காளி:

கதையில், ஹீரோ பாண்டி தன்னுடைய முறைப்பெண் மீனாவை பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த உடனே திருமணம் செய்து கொள்ளாமல் கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரிக்குச் சென்றவுடன் மீனா காதல் செய்கிறார். இதனால் பாண்டியை திருமணம் செய்து கொள்ள மீனா மறுக்கிறார். பின் மொத்த குடும்பமே அவருக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லி, அவரை சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

கதைக்களம்:

அப்படி அவர்கள் அழைத்துச் செல்லும் பயணம் தான் படத்தின் கதை. கடைசியில் மீனாவுக்கு பிடித்த பேய் ஓட்டப்பட்டதா? சூரியை திருமணம் செய்து கொண்டாரா? சூரி என்ன செய்தார்? என்பதுதான் மீதி கதை. இப்படத்தில் பாண்டி கதாபாத்திரத்தில் சூரி மிரட்டிஉள்ளார். மேலும், படத்தின் முழு கதையுமே சூரி சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வலைப்பேச்சு அந்தணன்:

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், கொட்டுக்காளி படத்தைப் பற்றி பேசி இருக்கும் வீடியோ தான் எதிர்மறையாக இருக்கிறது. அதில் அவர், கொட்டுக்காளி ரொம்ப சுமாரான படம் தான். படம் நன்றாக தான் இருக்கிறது. ஒரு கிராமத்தில் நடப்பதை எதார்த்தமாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் கொண்டாடும் அளவுக்கு அந்த படம் இல்லை என்று தான் சொல்வேன். இவர்கள் பேசுவதை பார்த்தால் 10 ஆஸ்கார் கொடுப்பது போல் இருந்தது.

https://www.youtube.com/watch?v=dAbbdluEMHI

கொட்டுக்காளி குறித்து:

இது போன்ற படங்கள் எல்லாம் அந்த காலத்திலேயே பாலு மகேந்திரா எடுத்திருக்கிறார். கேமராவை வைத்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவார்கள் போல, வைத்த கேமரா அப்படியே இருக்கிறது. படத்தில் ஒருவர் நடக்கிறார், ஒருவர் மாடு மேய்க்கிறார், ஒருவர் எங்கேயோ நிற்கிறார். இது எல்லாம் ஒரு படமா?. படம் என்றால் நகர வேண்டும் , அதை நகர்த்த வேண்டும் என்று விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொட்டுக்காளிபடத்தை கொண்டாடி வரும்போது, வலைப்பேச்சு அந்தணன் இது போல் கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full