சமுதாயத்தை சீர் அழிக்கும் ஊடக நஞ்சு பிக் பாஸ் - ஆவேசத்தில் தவாக தலைவர் வெளியிட்ட அதிரடி அறிக்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஒரு வாரம் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த முறை எகிப்த் அரண்மனை ஸ்டைலில் வித்தியாசமாக பிக் பாஸ் வீட்டை அமைத்திருக்கிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சி அமோகமாக தொடங்கி இருந்தது. நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் நந்தினி திடீர் என்று வெளியேற்றப்பட்டிருந்தார். பின் முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறி இருந்தார். மேலும், இரண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றிருக்கிறது.
பிக் பாஸ் 9:
இதில் பார்வதி, கம்ருதின், அரோரா, எப்ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன் அளித்திருக்கும் அறிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. அதில் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, துரோகம், ஆபாசம், பொய் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் உடைய கலவையாக உள்ளது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
தமிழ் குடும்பத்தின் அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்பாட்டுகளை அழிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கிறது. தமிழர் மரபையும், மதிப்பையும் கேலி செய்து சீரழிக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி சென்று இருக்கிறது. உடனடியாக இதை தடுத்து நிறுத்த நிறுத்த வேண்டும். சமூக தமிழர் பண்பாட்டியும் குடும்ப அமைப்பையும் குலைக்கும் நச்சு நிகழ்ச்சி தான் இது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு வெறுப்பையும் வன்முறையையும் தனிமதியிட மோதல்களை மட்டும் தான் கற்றுக் கொடுக்கிறது.
வேல்முருகன் அறிக்கை:
இது குடும்ப நல்லினத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் எதிரான பண்பாடு. இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், விதிமீறல்கள், சமூக எதிர்ப்புகளை எழுப்பி இருக்கிறது. பிக் பாஸ் கன்னட நிகழ்ச்சியின் ஸ்டுடியோ மீது மாநில அரசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டதாக கூறி மூட உத்தரவிட்டிருக்கிறது. மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக 2021ல் இடைநிறுத்தப்பட்டது.
பிக் பாஸ் தடை:
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பொதுமக்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இப்படி இந்த நிகழ்ச்சிகளால் நிறைய கலாச்சார வீழ்ச்சி. இது நிகழ்ச்சியே கிடையாது. ஒரு வணிக நோயாக இருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் ஒரு ஊடக நஞ்சு. தமிழக அரசும் தமிழ் மரபையும் எதிர்கால சந்ததியையும் காக்கும் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.