விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து ‘str47’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது GVM – STR கூட்டணி. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைக்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கௌதம் மேனன் பிறந்தநாளில் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அப்போது  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’  என்று தான் டைட்டில் வைத்தனர். ஆனால், இந்த டைட்டில் கொஞ்சம் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருந்தது.

ஜெயமோகன்

இதனால் இந்த படத்தின் டைட்டிலை ‘வெந்து தணிந்த காடு’ என்று மாற்றி நேற்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதற்கு முக்கிய காரணம் சிம்பு தானாம். அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2 ‘ படம் எடுக்க திட்டமிடபட்டிருந்தது.ஆனால், அந்த திரைப்படத்தின் பணிகள் துவங்குவதற்குள் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் ஒரு படம் உருவாக திட்டமிடபட்டுவிட்டது.

இதையும் பாருங்க : சீன் சொல்லிக்கொண்டு இருக்கும் போது சிகரெட் பிடித்த மீரா மிதுன் – கடுப்பான Kpy கோதண்டம்.

Advertisement

அது தான்  ‘நதிகளிலே நீராடும் சூரியன்’. இப்படி ஒரு கெளதம் மேனனிடம் தனுஷின் ‘அசுரன்’ போல கனமான கதைக்களம் கொண்ட படம் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறார்.இதனால் ஜெயமோகனின் ‘அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையை படமாக்கும் உரிமையை வாங்கி அதற்கான பணிகளில் ஈடுபட்டார் கெளதம் மேனன். அந்த படம் தான் இந்த ‘வெந்து தணிந்த காடு’.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் அசுரன் படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கமலத்துள்ளார். சிம்பு தற்போது உடல் எடையை குறைத்து சின்னப் பையன் போலமாறி இருக்கிறார். அவருக்கு இந்த பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவுசெய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது என்று விளக்கமளித்துள்ளார் ஜெயமோகன்.

Advertisement
Advertisement