பிரபல டபுள் மீனிங் மன்னன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்னவானார் ? பல ஆண்டு களைத்து அவர் பங்கேற்ற முதல் பேட்டி.

By Rajkumar · 6/3/2023

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கலக்கிய பல பிரபலமான நடிகர்கள் தற்போது என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அந்த வகையில் எம் ஜி ஆர், சிவாஜி காலம் முதல் விஜய்,அஜித் காலம் வரை பல படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தியை பல ஆண்டுகளாக சினிமாவில் காண முடிவதில்லை. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் 'வெண்ணிறாடை மூர்த்தி'. அதோடு வெண்ணிறாடை மூர்த்திக்கு தற்போது 81 வயது ஆகிவிட்டதா?? மேலும்,இவர் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதை பற்றி பார்க்கலாம்.

வெண்ணிற ஆடை மூர்த்தி நடிகர், வக்கீல்,கதாசிரியர்,சின்னத்திரை இயக்குனர், ஜோசியர் எனப் பல முகங்களைக் கொண்டவர். இவர் 1936 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். அதுமட்டும் இல்லாமல் சினிமா உலகில் நகைச் சுவையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. மேலும், இவர் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார்.

81வது பிறந்தநாள் :

இதனை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிற ஆடை' என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர் மூர்த்தி.இந்த படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் 'வெண்ணிறாடை மூர்த்தி' என்று அழைக்கத் தொடங்கினார்கள். சமீபத்தில் இவர் 81 வது பிறந்த நாளை தன்னுடைய குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடி உள்ளார். மேலும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 81 வயதா!!! என்று எல்லோரும் பிரமித்துப் போய் விட்டார்கள்.

https://www.youtube.com/watch?v=OU5IQxAN4HY&t=55s

இரட்டை மொழி மன்னன் :

மேலும், தன்னுடைய வெண்ணிற ஆடை மூர்த்தி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.தமிழ் சினிமா உலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி இன்று விஜய், அஜித் காலம் வரை அதாவது மூன்று தலைமுறைக்கும் மேலாக சினிமா உலகில் சிறந்த காமெடி நடிகராக விளங்கி வருகிறார்.மேலும், இவர் தன்னுடைய உடல் வித்தியாசமான பாவனைகளாலும், இரட்டை மொழி வசனங்களாலும், வித்தியாசமான குரலினாலும் மக்கள் மத்தியில் இன்று வரை பிரபலமாக உள்ளார்.

50 ஆண்டு சினிமா வாழ்க்கை :

இவர் சினிமா உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேல் நடித்துள்ள நடிகை மணிமாலாவை திருமணம் செய்து கொண்டார்.இவர் 1965 ஆம் ஆண்டு படப்பிடிப்பில் தான் நடிகை மணிமாலாவை பார்த்தார். பின் இருவரும் முதலில் நட்புடன் பழகி வந்தார்கள். சில காலங்களில் இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். பின் இவர்கள் இருவரும் 1970 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

300க்கும் மேற்பட்ட படங்கள் :

இவர் சினிமா உலகில் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். தற்போது இரண்டு வருடங்களாக இவருடைய உடல் நிலை நடிப்பதற்கு ஒத்துப் போகாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார் வெண்ணிறாடை மூர்த்தி. அதில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full