ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தேன், ஆனால் - 'மாநாடு' படம் பற்றி வெங்கட் பிரபு போட்ட பதிவு
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
வெங்கட் பிரபு குறித்த தகவல்:
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார். மேலும், இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். உலகம் முழுவதும் ‘கோட்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மாநாடு படம் தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு ஒன்று பட்டிருக்கிறார்.
வெங்கட் பிரபு பதிவு:
அதில் அவர், மாநாடு படம் வேடிக்கையான வித்தியாசமான டைம் லூப் பற்றிய படத்தை எடுத்தேன். ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என்று உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். பரிசார்த்த முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றி. நீங்கள் தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் அன்பிற்கும் நம்பிக்கைக்கு நன்றி என்று கூறி இருக்கிறார்.
மாநாடு படம்:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை
சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது.