அந்த ஃப்ரேமை பார்த்துட்டு விஜய் சார் இத தான் சொன்னார் - இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த விஷயம்

முதல்வர் விஜய் பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த விஷயம்

By subhashini · 21/6/2026

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் தயாரிப்பாளர் டி. சிவாவும் ஒரு நிகழ்வை நடத்தி இருக்கிறார். இந்த நிகழ்வில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்து கொண்டிருந்தார். அதற்குப்பின் தயாரிப்பாளர் டி. சிவாவும் வெங்கட் பிரபுவும் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய் சார் கிட்ட நான் அந்த பிரேமை கொண்டு போய் கொடுத்தேன்.

அவர் அதை பிரித்துப் பார்த்து அடுத்த நொடி சிரிக்க ஆரம்பித்து விட்டார். சிரித்துக் கொண்டே உன்னால மட்டும் தாண்டா இதையெல்லாம் பிரேம் பண்ணி எடுத்துட்டு வர முடியும் என்று சொன்னார். அதை ரொம்பவே என்ஜாய் பண்ணி பார்த்தார். நிஜமாகவே அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்பட்டார். ஒரு விஷயத்தை உண்மையாக மேனிபெஸ்ட் பண்ணினால் அது கண்டிப்பாக நடக்கும் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. நாம் ஒரு விஷயத்தை முழுவதுமாக நம்பி அது நடக்கணும்னு உண்மையாக நினைத்தோம்னா இந்த யுனிவர்ஸ் அதை நடத்தி காட்டிவிடும். அவர் உண்மையாகவே 'Greatest of all time' தான் என்று கூறி இருக்கிறார்.

வெங்கட் பிரபு சொன்னது:

இவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் டி சிவா, நம்முடைய அன்பிற்குரிய தளபதி மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 2017 ஆம் வருஷம் நான் அவரை நேரில் போய் சந்தித்தேன். அப்போ ஒரு மக்கள் வெள்ளத்துக்கு நடுவில் அவர் மிதந்து வர மாதிரி ஒரு அழகான ஹேண்ட் பெயிண்டிங் பண்ணி அதற்கு கீழே ஆட்சி பீடம் என்று டைட்டில் வைத்து அவருக்கு அன்பாக கொடுத்தேன். அதை பார்த்த உடனே இது என்னன்னு கேட்டார். அதுக்கு நான், நீங்க மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து இந்த ஆட்சி பீடத்தில் உட்காரணும் சார். அதுதான் என்னுடைய ஆசை என்று சொன்னேன்.

சிவா சொன்னது:

அதைக் கேட்டு சும்மா சிரித்தவர், நேரம் வரும்போது சொல்றேன்னு சொன்னார். அவர் சொன்ன அந்த நேரம் வரதுக்கு கரெக்டா ஒரு ஆறு வருடம் ஆகி இருக்கும். இப்ப அவரை ஒரு முதல்வராக நேரில் சந்தித்து பேசும் போது இந்த பழைய சம்பவத்தை அவரே ஞாபகம் வைத்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்கும் போது மனதுக்கு அவ்வளவு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஏன்னா, இந்த தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டி போட்ட ஒரு மாபெரும் தருணம். அவருடைய இந்த பிறந்த நாளை தமிழகத்தோடு ஒரு புதிய மறுமலர்ச்சிக்கான நாளாக தான் பார்க்கிறேன்.

நான் 2017ல் இருந்தே அவர் கிட்ட அரசியலுக்கு வாங்கன்னு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தேன். அது சுயநலத்திற்கோ அல்லது ஏதோ ஒரு எதிர்பார்ப்பிலோ கேட்டது கிடையாது. இந்த நாட்டுக்கு ஒரு நல்லது நடக்கணும். நல்லவர்கள் அரசியலுக்கு வரணும். எந்தவித சுயநலமும் இல்லாத ஒரு நல்லாட்சி அமையும் என்று ஆசையில் மட்டும்தான் அவரிடம் கேட்டேன். அதை இன்னைக்கு நிஜமாகவே பார்க்கும்போது ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full