GOAT படமே ஒரு Nepotism- விமர்சித்தவருக்கு வெங்கட் பிரபு கொடுத்த நச் பதிலடி

By subhashini · 30/8/2024

கோட் படம் தொடர்பாக நெட்டிசன் விமர்சனத்திற்கு வெங்கட் பிரபு கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து, இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை இவர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார்.

கோட் படம்:

மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். இதுவரை இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து விஜயின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியிருந்தது. இந்தப் பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

கோட் பாடல்கள்:

அது மட்டும் இல்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து கோட் படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. ஆனால், இப்பாடல் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும், சமீபத்தில் தான் கோட் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா, நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி உள்ளார்கள்.

நெட்டிசன் ட்ரோல்:

மொத்தத்தில் பார்க்கும்போது கோட் ஒரு நல்ல ஆக்சன் பிளாக் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும் என தெரிகிறது. அதோடு ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனால் தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கோட் படம் தொடர்பாக நெட்டிசன் ஒருவர், எஸ்ஏசி பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசியா வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கலாபதி அகோரம் பொண்ணு இணைந்து மிரட்டும் கோட் என்று கிண்டலடித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

வெங்கட் பிரபு பதிலடி:

இதை பார்த்த வெங்கட் பிரபு, நன்றிங்க ப்ரோ. உங்க அப்பா பெயர் சொல்லுங்க அவருக்கும் நன்றி சொல்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதற்கு அந்த நெட்டிசன், தேவைப்படாது ப்ரோ. நான் நெப்போட்டிசம் ப்ராடக்ட் இல்லை என்று நக்கல் அடித்து இருக்கிறார். தற்போது இந்த பதிவுதான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full