அம்மா இறக்கும் போது கூட சின்னவன தனியா விட்டுட்டு போறேன்னே- எமோஷனலாக வெங்கட் பிரபு சொன்னது
பிரேம்ஜி குறித்து எமோஷனலாக வெங்கட் பிரபு கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து, இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி நடித்து இருக்கிறார்.
கோட் படம்:
மேலும், இவர்களுடன் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறார்கள். இதுவரை இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் கோட் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். அதோடு ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
வெங்கட் பிரபு பேட்டி:
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு, கல்யாணம் சத்தியமாகவே இல்லை என்று பிரேம்ஜியை பலருமே கேலி செய்திருக்கோம். மறைந்த என் அம்மாவின் ஆசீர்வாதமே இந்த கல்யாணம் நடந்ததற்கு காரணம். அம்மா இறக்கும் போது கூட சின்னவனை தனியா விட்டுட்டு போறேன்னு என்று கண் கலங்கினார்கள். அந்த வார்த்தைகளும், பார்வையும் என் கண்ணை விட்டு போகவே இல்லை.
பிரேம்ஜி குறித்து சொன்னது:
இப்ப சார் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேங்கிறார். சனிக்கிழமை இரவு எங்கிருந்தாலும் என்னை தேடி வருவான். இப்ப சத்தமே இல்லாமல் வீட்டில் இருக்கான் என்று சந்தோஷத்தில் வெங்கட் பிரபு கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பிரேம்ஜி அமரன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். இது ஒரு பக்கம் இருக்க, பல வருடங்களாகவே பிரேம்ஜிக்கு திருமணம் எப்போது? ஏன் நடக்கவில்லை? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள்.
பிரேம்ஜி திருமணம்:
சமீபத்தில் தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவருக்கு திருமணமாகி இருக்கிறது. இவர் இந்து என்ற பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவர் சேலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இது காதல் திருமணம். இந்து தான் முதலில் பிரேம்ஜி இடம் காதலை சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான் இருவருமே வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்கள். மேலும், இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து இருந்தார்கள்.