பணத்துக்கா? மனநிலை பாதிக்கப்பட்டவானா? பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய வெங்கடேஷ் பட்
பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெங்கடேஷ் பட் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள்.
இதுவரை ஐந்து சீசன் முடிவடைந்து இருக்கிறது. ஆனால், கடைசி சீசனில் இருந்து வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார். இது பாலருக்கும் பேர் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நம்பிக்கையாக இருந்ததே வெங்கடேஷ் பட் தான். அதன் பின் குக் வித் கோமாளி 5ல் தாமுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அதேபோல் வெங்கடேஷ் பட் அவர்கள் சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற சமையல் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள்.
வெங்கடேஷ் பட் குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியுமே எதிர்பார்த்ததை விட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இருந்தாலுமே, வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு மாறியதற்கு பல விமர்சனங்கள், பல கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். ஆனால், அதற்கு உண்மையான காரணத்தையும் வெங்கடேஷ் பட் சொல்லி விட்டார். குறிப்பாக, மீடியா மேஷன்ஸ் என்ற நிறுவனம் என்னோடு ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே அந்த நிறுவனத்தில் உள்ள தயாரிப்பாளர், இயக்குனர்கள் எல்லோருமே எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் இருந்து விலகிய காரணம்:
நான் விஜய் டிவியில் இத்தனை வருடமாக சுதந்திரமாக வேலை செய்ததற்கு காரணமும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான். அவர்களுக்கும் விஜய் மேஷன்ஸ் இடையே சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் வெளியே வந்து விட்டார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் தான் கம்போர்ட். அதனால் நானும் அவர்களோடு வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தான் நான் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=gChib2qN9j0
பயில்வான் வீடியோ:
அதில் அவர், கோடி கணக்கில் வெங்கடேஸ் சம்பளம் கேட்டதால் தான் விஜய் டிவி கடுப்பாகி அவரை நீக்கிவிட்டது. அதனால் மட்டும் தான் அவர் விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு போனார் என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக வெங்கடேஷ் பட் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், சோசியல் மீடியாவில் என்னைப் பற்றி தவறாக பேசி பயில்வான் ரங்கநாதன் வீடியோ போட்டதற்கு பலருமே அவரை திட்டி கமெண்ட் போட்டு வருகிறீர்கள்.
வெங்கடேஷ் பட் வீடியோ:
என்னை நேசிக்கும், என் மீது மரியாதை வைத்து எனக்காக குரல் கொடுத்திருக்கும் அனைவருக்குமே நன்றி.
நீங்கள் அவரை திட்டி எதுவும் போட வேணாம். அவர் பணத்திற்காக பேசுகிறாரா? இல்ல மனநிலை பாதிக்கப்பட்டு பேசுகிறாரோ? பிழைப்புக்காக பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அவர் என்னவோ செய்து கொண்டிருக்கட்டும். மற்றவர்கள் சொல்வதை நாம் காதில் வாங்கிக் கொள்ள தேவையில்லை. உண்மை என்ன என்று நமக்கு தெரியும். நம் தலைவர் சொல்வது போல் நம்ம வேலையை பார்த்து போய்க் கொண்டே இருப்போம். சாணி மேல கல் எறிந்தால் அது நம்ம முகத்தில் தான் வீசும் என்று கூறியிருக்கிறார்.