அறிமுக இயக்குனர் பஸ்கல் வேதம் நடிகர் த்ரிவ் மற்றும் நடிகை இஸ்மேத் பானு நடிகர் எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் வெப்பம் குளிர் மழை. இந்தப் படத்தின் மையக்கருத்து என்னவென்று பார்த்தால் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியினருக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் இந்த சமூகம் மன ரீதியாக எவ்வளவு பிரச்சினைகளை தருகின்றது என்பது தான். அவர்களது போன்ற பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் மற்றும் ஏளனமான பேச்சுக்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அனைவரும் பிரச்சனைகள் பற்றிய படம் தான் இந்த வெப்பம் குளிர் மழை திரைப்படம்.

படத்தின் கதை சிவகங்கை மாவட்டத்தில் ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் ஒன்று நடைபெறுகிறது. அந்தத் திருமணம் நடைபெற்று முடிந்த பின் கணவன் மனைவி என இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது இல்லற வாழ்க்கை நடத்தி வருகின்றனர். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் இருவரும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றது. இதனால் இவர்களை ஊர்மக்கள் ஏளனமான பேச்சுக்களை பேசி வருகின்றனர். மேலும் ஊர் மக்களிடம் கெட்ட பெரும் கிடைக்கின்றது.

Advertisement

அதனால் கணவனின் அம்மா மனைவியை நீ ஒரு மலடி உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. உன்னால் என் மகனுக்கு ஒரு வாரிசை கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்று அவ்வப்போது அந்த மனைவிக்கு அழுத்தம் கொடுக்கின்றார்கள். அதனால் ஒரு பக்கம் அழுத்தத்தில் கதாநாயகியும் மற்றொரு பக்கம் கதாநாயகனுக்கு ஒரு சில அழுத்தமான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திரைப்படத்தில் கதாநாயகன் ஒரு பெரிய ஊரில் ஒரு பெரிய மனிதராக இருக்கின்றார். எப்போது ஊரில் என்ன நடந்தாலும் முதல் மரியாதை இவருக்கு தான் நடைபெறுகின்றது. அதைப் பார்த்து ஒரு சில ஊர் நபர்கள் இவருக்கு குழந்தை இல்லை அடுத்த வாரிசு இல்லை இவர் எப்படி இப்போது பெரிய மனிதராக இருக்க முடியும் என்று அவரை ஏளனமாக பேசுகிறார்கள்.

இவரை கஷ்டப்படுத்தும் வகையில் பொதுவாக அந்த நபர்கள் பேசுகிறார்கள். எனவே மனைவி கணவனை வலுக்கட்டாயமாக அழைத்து மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். அதில் குறைபாடு பெண்ணுக்கு அல்ல ஆணுக்கு தான் என்பது தெரிய வருகிறது. இதற்கு முன்பாக கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கணவனின் அம்மா ஆசைப்பட்டிருந்தார். அதன் பிறகு தான் கதாநாயகி பாண்டி ஒரு துணிச்சலான முடிவை ஒன்றை எடுக்கறார். அதன் பின்பு கதாநாயகி IVF அறிவியல் முறையில் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறார்.

Advertisement

குழந்தையை பெற்றுக் கொண்டும் சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இருப்பினும் இரு கதாநாயகி பாண்டிக்கு இது மனதில் ஒரு உறுத்தலாகவே இருக்கின்றது. ஒரு கட்டத்திற்கு மேலாக கதாநாயகி பாண்டிக்கு உண்மையை ஒற்றுக்கொள்கிறார்கள். அது தன்னுடைய குழந்தை இல்லையா என்ற கதாநாயகன் பெத்த பெருமாளுக்கு அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதன் பின்பு குழந்தையை தூக்கிக் கொஞ்சுவது அது போன்ற செயல்களில் அவர் ஈடுபடவில்லை. இதன் பின்பு இருவருக்கும் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.

Advertisement

இப்படி ஒரு சென்சிடிவான கருத்தை எடுத்துக்கொண்டு படம் எடுத்தற்கும் அதற்கு ஏற்றார் போல் சரியான நடிகர்களை தேர்வு செய்து எடுத்ததற்காக படத்தின் குழுவை அனைவரும் பாராட்டலாம். குழந்தை இல்லாத பிரச்சினையை மையமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் எங்கேயும் ஒரு தேவையற்ற காட்சிகள் போன்ற படத்தில் எதுவும் இல்லை. இவ்வளவு அறிவியல் வளர்ச்சிகள் வளர்ந்த பின்னும் குழந்தை இல்லாத பிரச்சனைகள் பெண்களுக்குத்தான் என்றும் சமூகத்தில் பலர் நம்புகிறார்கள். இந்த பிரச்சனை நகரத்தை விட கிராமத்தில் தான் வெகுவாக பார்க்க முடிகிறது.

நிறை:

படத்தில் கதாப்பாத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோல்களில் சிறப்பாக நடித்து இருந்தார்கள்.

எங்கேயும் ஒரு தேவையற்ற ஒரு காட்சி அமைப்பு கிடையாது.

கதாநாயகனாக நடித்த பெத்த பெருமாளின் கதாபாத்திரமும் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

குழந்தை பெற முடியாத தம்பதிகள் சந்திக்கும் விமர்சனங்கள், கேலிகளை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்தது.

குறை :

படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக உள்ளது.

படத்தில் ஒரு சில லாஜிக் மீறல்கள்

குறிப்பாக கணவன் அனுமதி இல்லாமல் மனைவி IVF செய்ய முடியுமா? என்பது மிகப்பெரிய சந்தேகம்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

Advertisement