ஜி.வி.பிரகாஷை நடிக்க வேண்டாம்ன்னு சொன்னேன், ஆனால் அவர் சொன்னது - இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்

By ·

ஜி.வி பிரகாஷ் குறித்து கிங்ஸ்டன் பட விழாவில் வெற்றிமாறன் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.

ஜி.வி.பிரகாஷ் குறித்த தகவல்:

தற்போது ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிங்ஸ்டன். இந்த படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் கீழ் ஜி.வி பிரகாஷ் தான் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராகவும் ஜி வி பிரகாஷ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த படத்தை கமல் பிரகாஷ் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் திவ்யபாரதி நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே பேச்சுலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் வெற்றிமாறன்:

மேலும், கடல் சார்ந்த கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஜி.வி பிரகாஷினுடைய 25 வது படம் ஆகும். இந்த படம் மார்ச் ஏழாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கிங்ஸ்டன் பட குழுவினருடன் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா உட்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது விழாவில் பேசிய வெற்றிமாறன், ஜிவி பிரகாஷ் ஒரு பக்கம் இசை, இன்னொரு பக்கம் நடிப்பு என்று பிஸியாக இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் குறித்து சொன்னது:

இப்படி பிஸியான நேரங்களில் எப்போது அழைத்தாலுமே அவர் சரி என்கிறார். ஒரு நாளும் பிஸியாக இருக்கிறேன் என்று அவர் சொன்னதே கிடையாது. அதுதான் அவருடைய ஸ்பெஷல். அதுதான் அவருடைய நல்ல குணமுமே. ஒரு பத்து வருடத்திற்கு முன்பு ஜி.வி, எனக்கு ஒரு மியூசிக் மட்டும் பண்ணுவது சலிப்பாக இருக்குது. ஒரே ரூமில் இருப்பது போர் அடிக்குது. வெளியே போகணும் நடிக்கணும் என்று சொன்னார்.
ஆனால், அப்போது அவரை நடிக்க வேண்டாம் என்று பல பேர் சொன்னார்கள். அதில் நானும் ஒருவன். நல்ல மியூசிக் பண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் ஏன் நடிக்கணும் என்றெல்லாம் யோசித்தேன். அவர் நடித்த பிறகு தான் அவரோட மியூசிக் இன்னும் பிரமாதமாக, அழகாக மாறியது.

https://www.youtube.com/watch?v=4cXjmTmJcUM

படம் குறித்து சொன்னது:

நடிப்பு அவருக்கு படத்தையும், கதையும், காட்சியையும் இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள வைத்தது. அதனால் அவருடைய மியூசிக் முன்பிருந்ததை விட இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. நடிகராகவும் அவர் நல்லா பண்ணிக் கொண்டிருக்கிறார். கற்றுக் கொள்ள அவர் தயங்குவதே கிடையாது. முதலில் நடிக்கும் போது என்னிடம் கேட்டார். அதற்கு பின் சமீபத்தில் அவர், நான் ஒரு படம் தயாரிக்கப் போகிறேன். அதுவும் பெரிய படம் ஒன்று எடுக்கப் போறேன். பெரிய பட்ஜெட் என்று சொன்னார். தன்னுடைய ஒவ்வொரு பணியையும் அவ்வளவு ரசித்து ஆர்வத்துடன் ஜிவி பிரகாஷ் செய்கிறார். இந்த படம் ஹிட்டானால் ஜிவி இன்னும் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் சினிமாவில் பயணிப்பார். படத்திற்கு வரவேற்பு கொடுங்கள் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full