பா.ரஞ்சித் உடன் ரஜினிகாந்த் சேர இது தான் காரணம்- வெற்றிமாறன் சொன்ன விஷயம்

By subhashini · 26/9/2024

ரஜினிகாந்த்- பா. ரஞ்சித் கூட்டணி குறித்து வெற்றிமாறன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் 'The Hollywood Reporter' என்ற அமெரிக்க பத்திரிக்கை நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் சார்பாக ரவுண்ட் டேபிள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் வெற்றிமாறன், பா. ரஞ்சித், மகேஷ் நாராயணன், கரன் ஜோகர் உட்பட பல இயக்குனர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=1OUakohhcc8

அந்த நிகழ்வில் ஹேமா கமிட்டி அறிக்கை, ஓடிடி தளங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் என பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது பேசிய வெற்றிமாறன், இந்த முன்னணி நடிகர்கள் புதிய இயக்குனர்களுடன் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் பணியாற்றுவது சமீப காலமாக நடந்து கொண்டு வருகிறது.

விழாவில் வெற்றிமாறன்:

இந்த விஷயத்தில் உதாரணத்திற்கு நடிகர் ரஜினிகாந்தை சொல்வேன். ரஜினிகாந்த், பா. ரஞ்சித்தை அழைத்து தனக்கான பாணியில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அந்த படம் பா. ரஞ்சித் உடைய படமாக தான் இருக்க வேண்டும் என்று ரஜினி நினைத்து அவருடன் பணியாற்றி இருந்தார். முன்னணி நடிகர்கள் புதிய இயக்குனர்களின் திறமையை பார்த்தோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள்.

ரஜினி-ரஞ்சித் குறித்து சொன்னது:

இந்த மாற்றம் வழக்கத்திற்கு மாறாக ஒரு படைப்பை சினிமாவிற்கு கொடுக்கிறது. அதேபோல் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அதோட அந்த படத்தையும் அவரே தயாரித்தும் இருந்தார். இப்படி பல விஷயங்கள் சொல்லலாம் என்று கூறியிருக்கிறார். மேலும், பா. ரஞ்சித்- ரஜினி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் காலா, கபாலி. இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கபாலி படம்:

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கபாலி. இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கிஷோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன், அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான்விஜய், தன்ஷிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படத்தை தாணு தயாரித்து இருந்தார். இந்த படம் விமர்சனம், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

காலா படம்:

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் காலா. இந்த படத்தில் ரஜினிகாந்த், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full