தன் மனைவியின் 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய வெற்றிமாறன் - வைரலாகும் புகைப்படம்

By subhashini · 18/3/2025

வெற்றிமாறன் தன்னுடைய மனைவியின் ஐம்பதாவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. பெரும்பாலும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

வெற்றிமாறன் திரைப்பயணம்:

இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகி இருந்தது.

வெற்றிமாறன் படங்கள்:

இந்த இரண்டாம் பாகத்தில் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து தற்போது வெற்றிமாறன் அவர்கள் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுக்கிறது.

வெற்றிமாறன் குடும்பம்:

தற்போது இந்த படத்திற்கான வேலைகள் தான் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இவர் இன்னும் சில நடிகர்களின் படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் வெற்றி மாறன் அவர்கள் தன்னுடைய மனைவியின் ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் ஆர்த்தியை வெற்றிமாறன் சந்தித்திருக்கிறார்.

50வது பிறந்தநாள்:

முதல் சந்திப்பிலேயே இவருக்கு ஆர்த்தி மீது காதல் வந்தது. அதற்குப்பின் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகளும், கதிரவன் என்ற மகனும் இருக்கிறார்கள். தற்போது தன்னுடைய மனைவி ஆர்த்தியின் ஐம்பதாவது பிறந்தநாளை கோலாகலமாக இயக்குனர் வெற்றிமாறன் கொண்டாடி இருக்கிறார். மேலும், இந்த விழாவில் விஜய் சேதுபதி, பாடகி சைந்தவி உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பாடகர் கார்த்தியின் பாட்டு கச்சேரியும் இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மட்டும் இல்லாமல் கேட்டரிங் சர்வீஸ் மாதம் பட்டி ரங்கராஜ் தான் செய்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full