தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் துறை செந்தில்குமார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியரும் ஆவார். இவர் முதன் முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் காக்கி சட்டை, கோடி, பட்டாஸ் போன்ற பல படங்களை எடுத்திருக்கிறார்.

இவர் இயக்கிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கருடன். இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, மைம் கோபி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது.

Advertisement

கருடன் படத்தின் விழா:

இந்த விழாவில் கருடன் பட குழுவினர் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உட்பட பிரபலங்கள் பலருமே சிறப்பு விருந்தினராக கலந்து இருக்கிறார்கள். அப்போது விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், இந்த கருடன் படத்தை பொருத்தவரையில் செந்தில், சூரி இரண்டு பேருமே எனக்கு ரொம்ப முக்கியமானவர்கள். நானும் செந்திலும் சேர்ந்து பாலு மகேந்திரா சாரிடம் வேலை பார்த்து இருந்தோம். அது ஒரு கனாக்காலம்.

விழாவில் வெற்றிமாறன்:

படத்தின் சூட்டிங் நேரத்தில் தான் பாலு மகேந்திரா சாருக்கு ஸ்ட்ரோக் வந்தது. அப்போது 60 நாட்களுக்கு மேல் பாலு மகேந்திரா சாருடன் ஹாஸ்பிடல், வீடு என எல்லா இடத்திலுமே இருந்து அவருக்கு சேவை செய்தது செந்தில் தான். அவருக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செந்தில் தான் செய்தான். இதையெல்லாம் எப்படி நீ செய்கிறாய் என்று கேட்டபோது எங்க அப்பாவுக்கு நான் பண்ண மாட்டேனா அந்த மாதிரி தான் நான் பண்ணினேன் என்று சொன்னான்.

Advertisement

செந்தில் குறித்து சொன்னது:

இதுதான் செந்தில் உடைய உண்மையான குணம். எல்லா மனிதர்களுக்குள்ளும் நிறை,குறை எல்லாமே இருக்கும். செந்திலிடம் அளவுக்கு அதிகமான அன்பு இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் யாருடனும் எந்த ஒரு மனஸ்தாபமும் கொல்லாமல் உறவை வைத்துக் கொள்ளும் ஒரு நல்ல மனிதர். விடுதலை படத்திற்கு முன்பு நானும் சூரியும் ஒரு இரண்டு மூன்று தடவை தான் பார்த்திருப்போம். விடுதலை படத்திற்கு பிறகு தான் நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள ஆரம்பித்தோம்.

Advertisement

படம் குறித்து சொன்னது:

சசிகுமார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதற்கு காரணம் சூரிதான். இந்த படம் சசிகுமாருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி தரும் . மேலும், சமுத்திரகனி இந்த படத்தில் நடிக்கிறார் என்பது படத்தின் மீது நம்பிக்கை கொடுக்கிறது. மக்களோடு ரொம்ப நெருக்கமாக கனெக்ட் செய்யக்கூடியவர். இவர்களைத் தொடர்ந்து படத்தினுடைய இசை, ஸ்டண்ட், ஒலிப்பதிவு, பின்னணி இசை எல்லாமே சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் இந்த படம் ஒரு வெற்றி படமாக ஆக அமைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement