வேறு மொழியில் சிறை படம் ஓடியிருக்குமான்னு தெரியல, ஆனால் தமிழில் - இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்

By subhashini · 14/3/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் உதவிஇயக்குனராக இருந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது.

இதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி இருந்த படம் சிறை. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் எல்கே அக்ஷய் குமார் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தை லலித் குமார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் அவர்களுடைய கதையை வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.

சிறை படம்:

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வெளியாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய 75வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன், இந்த படத்தில் இருக்கும் உண்மை அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்து இருக்கிறது என நினைக்கிறேன்.

75வது நாள் கொண்டாட்டம்:

இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்கிரிப்டாக மாற்றி தன்னுடையதாக மாற்ற ப்ராசஸில் நிறைய சவால்கள் இருந்திருக்கும். அதை அவர் எதிர்கொண்டு படத்தை வெற்றியாக கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தை கேட்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்று வெற்றி அடைந்தால் இது என்னுடையது என்று குறிப்பிடும் பழக்கம் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=bj332xysLUE

வெற்றிமாறன் சொன்னது:

அதை எங்குமே தமிழ் கேட்கவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு. சிறை படத்தை தமிழ் மக்கள் பார்த்த விதம் ரொம்பவே நன்றாக இருக்கிறது. மற்ற மொழியில் சிறை படம் வெளியாகிருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா என்று தெரியவில்லை. தமிழில் மட்டும் தான் இது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full