என் அக்கா 9வது படிக்கும் போது டீச்சர் ஒருத்தர் - தன் குடும்பத்தில் நடந்த ஷாக்கிங் சம்பவத்தை சொன்ன வெற்றிமாறன்.

By Rajkumar · 27/11/2022

அனல் மேல் பனித்துளி படமானது கடந்த 18ஆம் தேதி ஓடிடியில் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ஆர் கெய்சர் இயக்கி வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபாமா குமார், லவ்லின் சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு சந்தோஷ நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமையும், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனையும் மையமாக வைத்து இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஒரு நேர்காணலின் பேட்டியளித்திருந்த நடிகை நடிகையான ஆண்ட்ரியா தான் சில வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முக்கியமான திரைப்படங்களில் இந்த "அனல் மேல் பனித்துளி" திரைப்படபமும் ஓன்று. இப்படத்தில் கதையை கேட்ட பின்னர் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படத்தில் நடிக்கும் சில காட்சிகளில் எனக்கு மட்டுமில்லை படத்தில் நடிக்கும் அனைவருக்குமே அதிர்ச்சிகரமாக இருந்தது. நாங்கள் திரைப்படத்தில் நடிப்பதே இவ்வளவு கடினமாக இருக்கிறதே ஆனால் இந்த விஷயம் உண்மையாகவே வெளியுலகில் நடப்பதை நினைத்தால் வயிறே கலங்குகிறது என்று கூறினார்.

படத்தை பற்றி பேசிக்கொண்டே தனக்கு நடந்ததை பற்றியும் பேசியிருந்தார் அதில் நான் இப்போது மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன் ஆனால் நான் சிறுவயதாக இருக்கும் போது தன்னை ஆபாசமாக தீண்டியது நடந்திருக்கிறது. உதாரணமாக பைக்கில் வந்து பின்னாடி தட்டிவிட்டு செல்வார்கள் ஆனால் அதை நாங்கள் சகஜம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதுதான் தவறு அப்படி இருப்பதனால்தான் இன்று சில சொல்லவே கூசும் நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு சமுதாயத்தில் நடந்து வருகிறது என்றும் தன்னுடைய ஆதங்கத்தை அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

வெற்றிமாறன் கூறியது:

https://www.youtube.com/watch?v=VJNOHfGAFbo&t=46s

இந்நிலையில் பிரபலமான செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த வெற்றிமாறனிடம் உங்களை சுற்றியுள்ள பெண்களுக்கு ஏதாவது ஓன்று இப்படி நடந்திருக்கிறதா என்று நிருபர் கேட்டார். அதற்கு பதிலளித்திருந்த வெற்றிமாறன் என்னுடைய அக்காவிற்க்கு கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அவன் ஒரு பள்ளி ஆசிரியர், அப்போது என்னுடைய அக்கா 9வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் நான் 6வது படித்து கொண்டிருந்தேன்.

அந்த விஷியத்தை என்னுடைய அக்கா `அப்பா அம்மா யாரிடமும் சொல்லவில்லை என்னிடம் தான் சொன்னார் அப்போது எனக்கு பயங்கரமான கோவம் வந்தது. நாங்கள் அவனிடம் தான் டியூஷன் சென்று கொண்டிருந்ததோம் பின்னர் டியூஷன் நிறுத்தப்பட்டது ஒருவேளை அக்கா என்னுடைய பெற்றோர்களிடம் இதனை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன், அதற்கு பிறகு என்ன நடந்தது என நாபாகம் இல்லை என்று வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இவர் இப்படி கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full