தமிழ் சினிமாவில் சமூக பிரச்சனைகளை பற்றி பேசும் படங்களின் வரிசையில் முதல் 5 இடங்களில் கண்டிப்பாக இருக்கும் படங்களில் ஓன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்த “பராசக்தி” திரைப்படம் .1952ஆம் வெளியான இப்படம் தற்போது 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை “ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில்” ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குனர் வெற்றிமாறன், அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாடாள மற்ற உறுப்பினர் கனிமொழி பேசும்போது “பராசக்தி” படம் சமூக மதிப்பீடுகளாக இருக்கட்டும், மாதமாக இருக்கட்டும் அந்த அணைத்து விஷியங்களையும் இப்படம் கேள்வி கேட்டிருப்பதை நம்மால் காண முடியும் வசனமாக பார்த்தாலும் சரி, நடிப்பாக பார்த்தாலும் சரி அதனை நம்மால் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும். அதுதான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம். குறிப்பாக பெண் அடக்குமுறை எதிர்த்து இப்படம் தைரியமாக பேசியுள்ளது. மேலும் இந்த படத்தில் பேசிய பல விஷியங்களை திமுக வந்த பிறகு அதனை ஒழிக்க பல திட்டங்களை போட்டுள்ளது. அதே போல பிச்சைக்காரர்கள் ஒழிப்பு ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தருவது என பல திட்டங்களை சொல்லலாம். மேலும் இந்த படத்தில் இருந்துந்தான் “திராவிட மாடல்” என்பது வெளிப்பட்டது என்று கூறியிருந்தார்.

Advertisement

வெற்றிமாறன் கூறியது :

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் `பராசக்தி திரைப்படம் ஒரு தலைமுறைக்கு தத்துவத்தை கூறும் படம் அல்லது அவர்களை மாற்றத்தை நோக்கி கொண்டுபோகும் ஒரு படமாக்கத்தான் நான் பார்க்கிறேன். இப்படம் சுதந்திரத்திற்கு முன்னதாக நடத்தப்பதாக காட்டப்பட்டாலும், இந்திய விடுதலையை பற்றி எந்த விஷியத்தையும் கூறவில்லை. சமூக விடுதலையை மட்டுமே இந்த படம் பேசுகிறது.

இன்றும் மாறவில்லை :

அண்மையின் இப்படத்தை பார்த்த போது “அரசியல் அதிகாரம் மட்டுமே மக்களுக்கு நீதியைக் கொடுக்காது” என்ற அம்பேத்காரின் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது என்று கூறினார். மேலும் சமுதாயம் பற்றி யாராவது படம் எடுக்க வந்தால் அவர்களை பதித்த படங்களில் கண்டிப்பாக “பராசக்தி” இருக்கும். ஏனெற்றால் அந்த படம் முன்வைக்கும் கேள்வுகளும், விமர்சனங்களும் இன்றும் மாற்றப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருந்தார்.

Advertisement

வசனத்திற்கு முக்கியத்துவம்:

மேலும் கடைசியாக பேசிய அமைச்சர் தங்கம் இப்படத்தில் வரும் பாடல்கள் குறித்தும் வசனங்கள் குறித்தும் பேசியிருந்தார். கருணாநிதியின் சிறப்பு என்னவென்றால் அவர் எப்போதும் தன்னுடைய அயிதங்களை கூர்மையாக வைத்திருப்பார். அதனை அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பயன்படுத்துவார். அப்படித்தான் “பராசக்தி” படத்திலும் தன்னுடைய எழுத்தை அயிதமாக பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக இப்படத்தில் “கல்யாணி மங்களகரமான பெயர்” என்பதில் கல்யாணி என்பது ஒரு முழுமையான ராகம் ஆனால் அந்த பெயர் இப்படத்தில் தினமும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணுக்கு வைத்திருப்பர் கலைஞர் என்று பல விஷியங்களை கூறிய அவர் “பராசக்தி” படமல்ல அது ஒரு குறியீட்டு என்று கூறியிருந்தார்.

Advertisement
Advertisement