வடசென்னை 2 வருமா? வராதா? விடுதலை பட விழாவில் வெற்றிமாறன் சொன்ன நச் பதில் - உற்சாகத்தில் ரசிகர்கள்

By subhashini · 27/11/2024

வடசென்னை 2 குறித்து வெற்றிமாறன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை.

இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார்.

விடுதலை படம்:

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை குறித்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் பாராட்டி இருந்தார்கள். விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டாம் பாகத்தைக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலை 2 படம்:

அதோடு இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்து இருக்கிறார். இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். முதல் பாகத்தில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்து இருந்தது. தற்போது இரண்டாம் பாகத்தில் தினந்தினமும் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இசைவெளியீட்டு விழா:

இந்நிலையில் இன்று சென்னையில் விடுதலை 2 படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் படக் குழுவினருடன் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அப்போது விழாவில் வெற்றிமாறன் பேசிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் வடசென்னை 2 எப்போது என்று சத்தம் போட்டு கத்தி இருக்கிறார்கள். அதற்கு வெற்றிமாறன், அது வரும் வரும் என்று சொல்லி இருக்கிறார். தற்போது இதை பார்த்த பலருமே, எங்க போனாலும் வடசென்னை 2 தான். எப்ப எப்பன்னு கேப்பீங்களாடா, அவரோட மத்த படத்தையும் ப்ரொமோட் பண்ண விடுங்கடா என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

வடசென்னை படம்:

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் மாபெறும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் ராஜன் தாதா கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருப்பார். அன்பு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருப்பார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வர இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full