விஜய் சொன்ன அப்பா சட்டை கதை - விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து வெற்றிமாறன் கருத்து.

By Rajkumar · 5/11/2023

பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட அவரது படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு தான் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதிலும் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறும் குட்டி ஸ்டோரி தான் இந்த விழாவில் ஹைலைட்டாக அமையும் அந்த வகையில் லியோ படத்தின் நான் ரெடி தான் பாடல் வெளியான போதே பெரும் சர்ச்சைகளை சந்தித்து இருந்ததால் லியோ படத்தின் இசை நிகழ்ச்சி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான பாஸ் கோரிக்கை காரணமாகவும் பாதுகாப்பை மனதில் கொண்டும் ரத்தாகி இருக்கிறது என்று படக்குழு அறிவித்து இருந்தது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் வெற்றி விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மேலும், இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பேசிய குட்டி ஸ்டோரி ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பேச்சுக்கு பதிலடி கொடுத்தது போல அமைந்தது.

இந்த விழாவில் மேலும் பேசிய விஜய் வீட்டுல குட்டி பையன் அப்பா ஓட சட்டையை போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச்ச கட்டிப்பான். அப்பாவோட சேர்ல உட்காந்து பார்ப்பான். அதுல என்ன தப்பு இருக்கு? ஆசைப்படுறதுலயும் கனவு காணுறதுலயும் எந்த தப்பும் இல்லை' என்றும் பேசி இருந்தார். அதே போல சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசிய புரட்சி தலைவர் ஒருத்தர்தான், நடிகர் திலகம், புரட்சி கலைஞர் விஜய் காந்த்,உலக நாயகன் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் ஒருத்தர்தான், தல ஒருத்தர்தான்.

https://www.youtube.com/watch?v=W4ijBNIvMDM

தளபதிக்கு அர்த்தம் தெரியுமா... நீங்க மன்னர்கள் நீங்க ஆணையிடுற விஷயங்களை நான் செய்யிற தளபதி என்றும் குறி இருந்தார். இப்படி இவர் பேசி இருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. என்னதான் சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பது போல விஜய் பேசி இருந்தாலும் தளபதி என்பது நான் மட்டும் தான் என்பது போல தான் விஜய் பேசி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஐய், முதலமைச்சர் ஸ்டாலினின் தளபதி பட்டத்திற்கு கொக்கி போடுவதாக தற்போது சர்ச்சை எழுந்து இருக்கிறது.

அதே போல இந்த விழாவில் குட்டி பையன் அப்பா ஓட சட்டையை போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச்ச கட்டிப்பான். அப்பாவோட சேர்ல உட்காந்து பார்ப்பான்' என்று விஜய் பேசியது ஸ்டாலினை தான் குறிப்பிட்டு பேசி இருப்பதாக கூறி வருகின்றனர். இதெற்கெல்லாம் தாண்டி இந்த விழாவில் தொகுப்பாளர்களான மிர்ச்சி விஜய்யும், டிடியும் விஜய்யிடம் ரேபிட் பையர் பாணியில் சில கேள்விகளை கேட்டனர்.அதில் 2026 என கேட்ட கேள்விக்கு விஜய்," கப்பு முக்கியம் பிகிலு" என விஜய் கூற அரங்கமே கரகோஷத்தால் நிரம்பியது.

https://twitter.com/jaikrish00/status/1719948279587479671?s=48

இப்படி விஜய் தனது அரசியல் வருகையை உறுதி செய்து இருக்கும் நிலையில் தற்போது அரசியல் விமர்சங்களும் விஜய் மீது மீண்டும் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வெற்றிமாறன் கூறியுள்ளதாவது அவங்க அரசியலுக்கு வருதற்கான வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். எல்லாருக்கும் அரசியலுக்கு வருதற்கான உரிமையிருக்கிறது. ஆனால், அதற்கு முன் அவர்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அதன் பிறகு அரசியலுக்கு வரவேண்டும். விஜய்யும் முதலில் களத்தில் இறங்கி வேலை செய்தபிறகு அரசியலுக்கு வரவேண்டும்' என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full