என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டரே விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி தான் - வெற்றிமாறன் சொன்ன விஷயம்.

By Arun · 30/9/2022

இயக்குனர் வெற்றிமாறன் குறித்து கலக்கப்போவது யாரு டி எஸ் கே சரவணன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய எதார்த்தமான காமெடி மூலமும், மிமிக்ரி மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் டி எஸ் கே சரவணன்.

அதனை தொடர்ந்து இவர் வெள்ளித் துறையிலும் சில படங்களின் நடித்திருக்கிறார். சமீபத்தில் முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவருடைய நண்பர் அசாருடன் இணைந்து போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் பட்டத்தையும் டி எஸ் கே தட்டிச் சென்றிருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் டி எஸ் கே அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

வெற்றிமாறன் குறித்து டி எஸ் கே போட்ட பதிவு:

அதில் அவர் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து கூறியிருந்தது, என்னுடைய வாழ்க்கையில் இயக்குனர் வெற்றிமாறன் சந்திப்பை எப்பொழுதுமே என்னால் மறக்கவே முடியாது. என் வேலையை நீங்கள் பாராட்டினது எனக்கு இன்னும் அதிக எனர்ஜியை கொடுத்திருக்கிறது. உங்களுடன் இருந்த அந்த இரண்டு மணி நேரம் என்னுடைய வாழ்க்கையிலேயே பொக்கிஷமான ஒன்று. உங்களுடைய நேரத்தை கொடுத்ததற்கு நன்றி என்று கூறியிருந்தார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதை தொடர்ந்து பிரபல மீடியா டி எஸ் கே சரவணனை தொடர்பு கொண்டு பேட்டியும் எடுத்திருந்தது.

டி எஸ் கே அளித்த பேட்டி:

அதில் அவர் வெற்றிமாறன் சந்திப்பு குறித்து கூறியிருந்தது, வெற்றிமாறன் சார் இயக்கி வரும் விடுதலை படத்துக்காக வாய்ஸ் டெஸ்ட் எடுக்க என்னை கூப்பிட்டு இருந்தார். அந்த படத்தில் வருகிற சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு என் வாய்ஸ் செட் ஆகும் என்று சார் சொல்லிருக்காங்க. அதனால் டெஸ்ட்க்கு கூப்பிட்டார்கள். அப்ப நான் ஒரு ஈவென்ட்காக கத்தாரியில் இருந்தேன். அங்கிருந்து வந்த மறுநாளே வெற்றிமாறன் சார் கிட்ட கிளம்பி போய் விட்டேன்.

வெற்றிமாறன் குறித்து சொன்னது:

நான் போனபோது சார் காலையில் அங்கு இல்லை. அதனால் வாய்ஸ் டெஸ்ட் மட்டும் கொடுத்துவிட்டு வந்து விட்டேன். மாலையில் சார் வந்திருக்கார் என்று சொல்லவும் அவரை பார்ப்பதற்காக நானும் அசாரும் போனோம். அவர் காமெடி ஷோவுக்கு மிகப்பெரிய ஃபேன். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஏன் இவ்வளவு சீக்கிரம் முடித்தீர்கள்? என்னுடைய ஸ்ட்ரெஸ் பஸ்டர் கலக்கப்போவது யாரு தான் என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் அவர் அந்த நிகழ்ச்சியை பார்க்க தனுஷ் சாருக்கும் சொல்லியிருந்தார்.

விடுதலை படம் குறித்து சொன்னது:

அதன் பிறகு தான் தனுஷ் சார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு எனக்கு போன் பண்ணி இருந்தார். நிறைய விஷயங்கள் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. அவருடைய தீவிர ரசிகன் நான். அவருடைய பேச்சு, ஆளுமை, ஸ்டைல், உணவு பழக்க வழக்கம் என்று எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய படத்தில் நடிக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. இது அவருடைய படத்தில் நடிப்பதற்கான சந்திப்பு இல்லை வாய்ஸ் டெஸ்டிக்கான சந்திப்பு மட்டும்தான் என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full