YouTube உலகசாதனையை முறியடித்தது விவேகம்

By Ajju · 15/9/2017
கடந்த மாதத்தில் சிவா--அஜீத் கூட்டணியில் உருவாகி வெளிவந்த விவேகம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. பெரும் வெற்றிபெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவிற்கு இப்படம் ஹிட்டாகவில்லை என்பது கசப்பான உண்மை. இருப்பினும் விவேகம் தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அஜீத் ரசிகர்கள் தான். படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட டீசருக்கு இதில் பெரும் பங்கு உண்டு. யூ--டியூப்பில் கடந்த மே மாதம் வெளியான இப்படத்தின் டீசர் இதுவரை 2 கோடி பார்வைகள் பார்த்துள்ளனர். மேலும் 5இலட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. எனவே இப்படத்தின் வெற்றிக்கான பெரும்பங்கு இயக்குஞரை விர ரசிகர்களையே சாரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை எனலாம். அஜீத் ரசிகர்கள் எப்பயுமே வெறித்தனமான அஜீத் ரசிகர்கள் தான்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full