மூன்றே ஆண்டில் விவகாரத்து, தற்போது 8 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் வெயில் பட நடிகை.

By Rajkumar · 30/8/2021

தமிழில் 2006ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காதல் பரத், பாவனா, பசுபதி, என்று பல்வேறு பிரபல நடிகர்கள் நடித்த இந்த படத்தில் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியாங்கா நாயர். பரத் மற்றும் பாவனா இருவருக்கும் இடையிலான காட்சிகளை விட இவர்கள் இருவரின் காட்சி தான் ரசிக்கும்படியாக இருந்தது என்றே கூறலாம்.

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை பிரியங்கா நாயர். இவர் 1985ஆம் ஆண்டு கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டு மாடலிங் செய்து வந்த பிரியங்கா, சில மலையாள சீரியல்களிலிம் நடித்து வந்தார். அதன்பின்னர் தனது 21 வயதில் வெயில் பட ஆடிஷனில் கலந்துகொண்டு தன் நடிப்பு திறமை மூலம் தேர்வானார் பிரியங்கா.

பின்னர் 2006 ஆம் ஆண்டில் இவர் நடித்திருந்த வெளிவந்த வெயில் படம், அந்த ஆண்டின் சிறந்த படத்திற்காக தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றது. வெயில் திரைப்படத்துக்கு பின்னர் பிரியங்கா நாயர் தமிழில், தொல்லைபேசி, செங்காத்து பூமியிலே, போன்ற படங்களில் நடித்தார். பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த அவர் மோகன்லால் மற்றும் மம்மூட்டிகு ஜோடியாக நடித்துள்ளார்.

தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்ட இவர் பின்னர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 8 வயதில் மகன் இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full