செல்ஃபீ எடுக்கச்சென்று உயிரைவிட்ட நபர்.!விடியோவை வெளியிட்ட காவல் துறை.!
தற்போதுள்ள தலைமுறை மத்தியில் செல்ஃபீ எனப்படும் சுயமாக புகைப்படம் எடுக்கும் பழக்கம் தான் அதிகமா உள்ளது. வித்யாசமாக செலஃபீ எடுக்க முயன்று கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இது வரை இந்தியாவில் மட்டும் 159 பேர் இறந்துள்ளனர்.
https://twitter.com/MumbaiPolice/status/1123808450365022208
இந்த நிலையில் ஆபத்தான செல்ஃபீ புகைப்படம் எடுப்பதால் ஏற்படும் ஆபத்துகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மும்பை காவல் துறை ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் அடுக்க மாடியில் இருந்து செல்ஃபீ எடுக்க முயன்ற நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு ரீ ட்வீட் செய்த நடிகர் சித்தார்த், இது போன்ற விடியோவை பகிர்வதற்கு முன்பாக கொஞ்சம் எச்சரிக்கை செய்யுங்கள்.சிறப்பான நோக்கம் தான், ஆனால் மோசமான செயல்பாடு என்று பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் அந்த விடீயோவிற்கு கீழ் எச்சரிக்கை செயப்பட்டது.
https://twitter.com/Actor_Siddharth/status/1123836809786613761
அதே போல இந்த வீடியோ மும்பையில் எடுக்கப்பட்டதில்லை என்றும் இதே போன்ற ஒரு வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் கூட வெளியிடபட்டது என்றும் கூறுகின்றனர். இருப்பினும் இந்த விழிப்புணர்வு விடியோவை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.