மீண்டும் பார்ட்டி, சர்ச்சையை ஏற்படுத்திய ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் வீடியோ. ரசிகர்கள் ஆதரவு குரல்.

By Arun · 22/7/2022

மும்பை சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை என்.சி.பி. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமேச்சா, கோமித், மோஹக் உள்ளிட்டோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஆர்யன் கான் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது :-

ஆர்யன் கானை முதன்மைக் குற்றவாளியாக சேர்த்திருந்த என்சிபி, ஆர்யனின் வாட்ஸ் அப் சாட்கள் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் ஆர்யன் கான் போதைப் பொருளை பெற்றது உறுதியாகியுள்ளது. அவரை வெளியே விட்டால் அவர் தனது அதிகாரமிக்க பின்புலத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று அவர் ஜாமீன் கோரி மும்பை செஷன்ஸ் தொடர்ந்த வழக்கில் வாதிட்டது.

இதையும் பாருங்க : அந்த பிரச்சனை இருந்தும் வைராக்யத்திற்கு குழந்தையை பெற்று என் மனைவி இருந்துவிட்டார் - பாராட்டோ காமெடி நடிகரின் அறிந்திராத பக்கம்.

போதைக்கு அடிமையானவர் ஆர்யன் கான் :-

ஆர்யன் கான் போதைப்பொருள் தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் உடையவர் என விசாரணையின் போது தெரியவந்ததாக என்.சி.பி., தெரிவித்த நிலையில், அதற்கான ஆதாரங்களையும் என்.சி.பி., தரப்பு நீதிமன்றத்தில் அளித்திருந்தது. இந்த பின்னணியில், ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என போதை பொருள் தடுப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

https://twitter.com/soshespoke/status/1549712106475380736

ஆர்யன் கான் குற்றமற்றவர் :-

21 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் இருந்தார் ஆர்யன் கான். இந்த நிலையில், ஷாருக்கான் மகன் ஆர்யன் கானிடம் போதைப் பொருள் இல்லை என்று போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்யன் கான் மற்றும் மோஹக் தவிர குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரிடமும் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என்டிபிஎஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு நபர்களுக்கு எதிரான புகார், ஆதாரம் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/DNB_ind/status/1549293260102946816

மறுபடியும் மது, கிளப் என சுற்றி திரியும் ஆர்யன் கான் :-

கோர்ட்டில் இருந்த ஆர்யன் கான் பாஸ்போர்ட்டும் திரும்ப பெறப்பட்டுவிட்டது. பிரச்னையில் இருந்து முற்றிலும் வெளியில் வந்திருப்பதால் ஆர்யன் மீண்டும் தனது சகஜமான வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார். நைட் கிளப் மற்றும் பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டார். ஆர்யன் கான் கிளப் ஒன்றில் மது அருந்துவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

https://twitter.com/KasthuriShankar/status/1549325278672875520

ஆர்யன் கானுக்கு ஆதரவு தெரிவித்த நெட்டிசன்கள் :-

இதைபார்த்து சிலர் விமர்சனம் செய்தாலும், சமூக வலைதளங்களில் அதிகமானோர் ஆர்யன் கான் மகிழ்ச்சியாக இருக்க அவருக்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். வீடியோவில் ஆர்யன் கான் முகம் சரியாக தெரியவில்லை என்றாலும் அது ஆர்யன் கான் தான் என்று அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் வீடியோ எடுத்தவர்களும் பார்ட்டிக்குத்தானே சென்றார்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதிகமானோர் ஆர்யன் கானை வாழவிடுங்கள். என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full