'டேய், அனிரூத் எட்ட போடா டேய்' - ஜோனிதாவை மறைத்ததால் திட்டிய ரசிகர். வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.
அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். அதோடு சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படத்தில் அனிரூத் உடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
அனிரூத் இசை அமைத்த படங்கள்:
அதனைத் தொடர்ந்து அவர் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதேபோல் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் அனிரூத் இசை அமைத்து இருந்தார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார். பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதிலும் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.
https://twitter.com/Tronil1/status/1572605539917627397
அனிரூத் இசை அமைக்கும் படங்கள்:
சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அனிருத் அவர்கள் சியான் 60, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம், தலைவர் 169 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் இசையமைப்பது மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது,
அனிருத் திருமணம்:
இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில்கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறி இருந்தார்கள். ஆனால், அது முற்றிலும் பொய் என்று கூறப்பட்டிருந்தது.
https://twitter.com/clearfire_99/status/1572606474056241153
அனிருத் இசை கச்சேரி :
சமீப காலமாக அனிருத்தும் ஜோனிட காந்தி இருவரும் சேர்ந்து ஒன்றாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படி ஒரு சமீபத்தில் அனிருத் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார் இதில் அனிருத்துடன் இணைந்து ஜோனிதாவும் சில பாடல்களை பாடியிருந்தார். அப்போது மேடைக்கு கீழே இருந்த ரசிகர் ஒருவர் ஜோனிதாவை அனிருத் மறைத்தார் என்று அனிருத் எட்ட போடா டேய் என்று கத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வாயிலாக பரவி வருகிறது.