லாக்டவுனுக்கு முன், லாக்டவுனுக்கு பின் - வித்யு லேகா பதிவிட்ட அவரது ஷாக்கிங் வீடியோ.
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
https://www.instagram.com/p/B_fIx-InFop/
இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் நுழையும் போது நடிகை வித்யு லேகா பப்ளியாக தான் இருநாதர். பின் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடல் எடையை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
https://www.instagram.com/p/B8YtC56H5KC/
மேலும், நடிகை வித்யு லேகா அவர்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் நடிகை வித்யு லேகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் நடிகை வித்யு லேகா அவர்கள் லாக்டவுனிற்கு முன், லாக்டவுனிற்கு பின் என ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வீட்டுக்குள் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, வீட்டு வேலை என பல வேலைகளை செய்து வருகிறார்கள்.