அடுத்த தளபதியே, அடுத்த சூப்பர் ஸ்டார்- கோசம் போட்டதும் பதறி போய் சூரி கொடுத்த ரியாக்ஷன்

By subhashini · 21/12/2024

அடுத்த தளபதி, சூப்பர் ஸ்டார் குறித்த கேள்விக்கு நடிகர் சூரி கொடுத்து இருக்கும் ரியாக்ஷன் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. இவர் சீரியலில் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் சூரி.

அந்த படத்தில் இவர் புரோட்டா சாப்பிட்டதன் மூலம் தான் புரோட்டா சூரி என்றே பெயர் வந்தது. அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய விடாமுயற்சினால் தற்போது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோ ஆனார்.

சூரி திரைப்பயணம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்து இருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இயமைத்திருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

விடுதலை 2 படம்:

முதல் படமே சூரிக்கு மிக பெரிய பெயரை வாங்கி தந்தது. இதை அடுத்து தற்போது ‘விடுதலை 2’ படம் வெளியாகி இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சூரி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அடுத்த தளபதி, அடுத்த சூப்பர் ஸ்டாரே என்று கரகோஷம் போட்டு கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

https://youtube.com/shorts/DQ3qgRsFgNk?si=kEqglgTMV-cM5krQ

சூரி வீடியோ:

உடனே சூரி, கையெடுத்து கும்பிட்டு அமைதியாக இருங்கள் என்று சொல்கிறார். பின் விடுதலை படம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கொடுத்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தில் அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இரண்டாவது பாகம் முழுக்க முழுக்க பெருமாள் வாத்தியாராக வரும் விஜய் சேதுபதியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறார்.

படத்தின் கதை:

படத்தில் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய் சேதுபதியிடம் போலீசார் மும்முரமாக விசாரணை நடத்துகிறார்கள். பின் அவரை வேறு ஒரு இடத்திற்கு சூரி அழைத்து செல்கிறார். அப்போது ஒரு காட்டுக்குள் இருவரும் சிக்கிக் கொள்வார்கள். எந்த பக்கம் போவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதி தன்னுடைய கதையை சொல்கிறார். விஜய் சேதுபதி மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்கிறார். இந்த சமயத்தில் தான் மஞ்சுவாரியரை சந்தித்து காதலித்து திருமணம் செய்கிறார். தன்னுடைய உயிருக்க உயிராக இருக்கும் நண்பனை கொலை செய்து விடுகிறார்கள் என்று விஜய் சேதுபதி பழிவாங்க போகிறார். அதற்குப்பின் என்ன நடந்தது? விஜய் சேதுபதி போலீஸ் பீடியில் இருந்து தப்பித்தாரா? சூரி என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதி கதை.

behindtalkies AMP · Quick view
View full