தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி இருக்கும் விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இதனால் தங்கள் இடமும் பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.

Advertisement

இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள். இந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபில் ஆக நடிகர் சூரி இருக்கிறார். இவர் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் போலீஸ் அதிகாரியாக சூரி நடித்திருக்கிறார். வழக்கம்போல் இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை சூரி வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத கண்டிராத கதாபாத்திரத்தில் சூரி நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இவரை அடுத்து விஜய் சேதுபதியும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், இரக்கமற்ற உயர் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்திருக்கிறார். பழங்குடியின பெண்ணாக பவானி இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

Advertisement

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. வழக்கம்போல் வெற்றிமாறன் காதல், ஆக்சன், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். நீண்ட வருடமாக வெற்றிமாறன் எடுத்த முயற்சி வெற்றி பெற்றது என்று சொல்லலாம். அதோடு மிக சிறப்பாக கதைகளத்தை கொண்டு சென்றிருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு விடுதலை படம் சிறப்பாக அமைந்திருக்கிறது. முதல் பாகம் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

Advertisement

அதோடு இரண்டாம் பாகத்தின் கிளைமாக்ஸ் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில இடங்களில் தோய்வு இருந்தாலும் திரைக்கதையின் மூலம் மிரட்டி இருக்கிறார் இயக்குனர். படத்தில் இடம்பெறும் வசனங்கள் கதைக்களத்தை நேர்த்தியாக கையாண்டு இருக்கிறது. எளிய மக்கள் மீது கடுமையாக போலீஸ் நடத்தும் அடக்குமுறைகளும், அதிகாரிகள் செய்யும் கொடுமைகள், குறிப்பாக பெண்களிடம் போலீஸ் நடந்து கொள்ளும் விதம் உள்ளிட்ட காட்சிகள் எல்லாம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

நிறைகள் :

சூரி, விஜய் சேதுபதி நடிப்பு சிறப்பு

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

கதைக்களம் அருமை

இயக்குனர் இயக்கிய விதம் சிறப்பு

குறைகள் :

படத்தின் முதல் பாதி நீளமாக செல்வது போல தோன்றுகிறது.

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக எந்த ஒரு குறைபாடுகளும் இல்லை

மொத்தத்தில் விடுதலை- ரசிகர்கள் மத்தியில் வெற்றி

Advertisement