‘விடுதலை’ படத்தில் வரும் 'பெருமாள் வாத்தியார்' உண்மை நாயகன் இவர் தான் - முழு விவரம் இதோ

By subhashini · 20/12/2024

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி இருந்த விடுதலை படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு இருந்தது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. விடுதலை படத்தின் முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாம் பாகம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி போராளியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அருமபுரி என்ற மலை கிராமத்தில் அரசு சுரங்கம் அமைக்க திட்டம் போடுகிறது.

அதற்கு எதிராக பெருமாள் வாத்தியார் தலைமையில் 'மக்கள் படை'என்ற அமைப்பு போராட்டத்தை நடத்துகிறது. போராட்டத்தின் முடிவில் என்ன நடந்தது தான் கதை. தமிழ்நாட்டில் நடந்த பல உண்மை சம்பவங்கள் படத்தில் காண்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 80களில் தமிழ்நாட்டில் அதிகமாக பேசப்பட்ட பெயர் புலவர் கு. கலியபெருமாள். இவருடைய பிரதிபலிப்பு தான் விடுதலை படத்தில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம். கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள சௌந்திர சோழபுரத்தில் பிறந்தவர்தான் கலியபெருமாள். இவர் ஆரம்பத்தில் பெரியாரிஸ்ட் ஆக இருந்தாலுமே பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டு வந்தார்.

விடுதலை 2:

கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து வெளியேறி நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்தார். அதோடு இவர் தமிழிலும் பட்டம் பெற்றவர். இதனால் இவர் சில வருடங்கள் தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார். அதனால் தான் இவரை புலவர் என்று அழைக்கிறார்கள். ஜாதி ஒழிப்பில் அதிக தீவிரம் காட்டியிருந்தவர். ஆசிரியர் பணியை விட்டு தன்னுடைய நண்பர்களுடனும், பொதுமக்களுடன் சேர்ந்து நிறைய நிலப்பரப்புகள் உடைய நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை எல்லாம் கடத்தி வந்து கிராமங்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைக்கு எதிராக போராட்டத்தை நடத்தி இருந்தவர். அதற்குப்பின் ஜாதி ஒழிப்பு, வர்த்தக விடுதலை என்ற பல போராட்டங்களை நடத்தி இருந்தார்.

கலியபெருமாள் குறித்த தகவல்:

இதனால் இவர் முழு நேரமும் அரசியல் செயல்பாடுகளிலேயே ஈடுபட்டிருந்தார். பின் இவர் சாருமஜும்தாரால் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து செயல்பட்டிருந்தார். ஏழை எளிய மக்களிடம் அதிகமாக வட்டி வாங்குபவர்கள், பொது சொத்துக்களை அபகரிப்பவர்கள் போன்றவர்களை அழிக்க போராடியவர். அதுமட்டுமில்லாமல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கலியபெருமாள் போராட்டத்தை தான் செய்திருந்தார். இதனால் தங்களுக்கு தேவையான ஆயுதங்களை அவர்களே தயார் செய்தார்கள். மேலும், கலியபெருமாளுடைய இயக்கத்தில் தமிழரசன் உட்பட பல இளைஞர்கள் சேர்ந்து செயல்பட்டிருந்தார்கள். விடுதலை படத்தில் குண்டு வைத்து ரயில் தகர்க்கப்படும் காட்சி ஒன்று வந்தது. இது 1987 ஆம் ஆண்டு அரியலூருக்கு அருகில் உள்ள மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்த சம்பவம்.

நீதிமன்றம் தீர்ப்பு:

இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். இது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருந்தது. கொலை வழக்கில் கலியம்பெருமாளுக்கும் அவருடைய மூத்த மகன் வள்ளுவனுக்கும் தூக்கு தண்டனை நீதிமன்றம் விதித்திருந்தது. இரண்டாவது மகன் சோழநம்பியாருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதித்தார்கள். அதற்குப் பின்ன இவர்களுடைய வழக்கு மேல்முறையீடு செய்திருந்தார்கள். அதில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதற்கு பின்பு பல வருடங்கள் சிறையிலேயே கலியபெருமாள் இருந்ததால் கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குடியரசுத் தலைவர் குறைத்து உத்தரவு போட்டிருந்தார்.

வாத்தியார் மகன் பேட்டி:

அதற்குப்பின் 1983 ஆம் ஆண்டு நிபந்தனையற்ற பரோல் கலியபெருமாளுக்கு கொடுக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு தான் கலியபெருமாள் விடுதலை செய்யப்பட்டார். அதற்குப்பின் 2007 ஆம் ஆண்டு கலியபெருமாள் இறந்துவிட்டார். மேலும் விடுதலை படம் பார்த்த கலியபெருமாளின் இரண்டாவது மகன், எங்களுடைய அப்பா மக்களுக்காக போராடி இருந்தவர். அவருக்காக மக்களும் ஆதரவாக இருந்தார்கள். அதை தான் படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full