கணவர் முன் அஜித் பட நாயகிக்கு நிகழ்ந்த சம்பவம் - சேலையால் ஏற்பட்ட தர்மசங்கடம்.

By Arun · 13/12/2022

தன்னுடைய கணவர் முன்பு நடிகை வித்யா பாலனுக்கு நடந்த தர்ம சங்கட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் வித்யா பாலன். கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளி வந்த திரைப்படம் ‘பலோ தேகோ’. இந்த படத்தினை இயக்குநர் கெளதம் ஹல்தர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக வித்யா ஹல்தர் நடித்திருந்தார். இது தான் வித்யா பாலன் அறிமுகமான முதல் திரைப்படம்.

இதனைத் தொடர்ந்து இவர் பாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இந்தியில் பல ஹிட் படங்களில் நடித்த வித்யா பாலன் இடைப்பட்ட காலத்தில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின் இவரது நடிப்பில் வெளியான ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் இவருக்கு ஒரு ரீ என்ட்ரி படமாக அமைந்தது.

வித்யா பாலன் திரைப்பயணம்:

அந்த படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை துவங்கினார் வித்யா பாலன். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் வித்யா பாலன் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகி இருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதோடு இவர் சில ஆண்டுகளுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகமானார்.

https://www.youtube.com/watch?v=1MEht9q7EXE

வித்யா பாலன் குறித்த தகவல்:

இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து இருந்தார் வித்யா பாலன். சமீப காலமாக இவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போதும் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வித்யா பாலனுக்கு நடந்த தர்ம சங்கடம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மும்பையில் பாலிவுட் தயாரிப்பாளர் குனீத் மோங்காவின் திருமணம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

குனீத் மோங்கா- சன்னி மோங்கா ஜோடி:

திருமணத்திற்கு முன் குனீத் மோங்கா- சன்னி மோங்கா ஜோடி இணைந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தி இருந்தார்கள். இதில் பல்வேறு திரை நட்சத்திரங்களும், பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தார்கள். கரண் ஜோஹர், விஷால் பரத்வாஜ், ஏக்தா கபூர், சோனாலி பிந்த்ரே மற்றும் கோல்டி பெஹ்ல், நேஹா தூபியா, மௌனி ராய், ரியா சக்ரவர்த்தி, சங்கி பாண்டே மற்றும் பாவ்னா பாண்டே, சஞ்சய் கபூர் என பலர் கலந்து கொண்டு இருந்தார்கள்.

https://www.youtube.com/shorts/gqX8zouIL8E

நிகழ்ச்சியில் வித்யா பாலன்:

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் தன்னுடைய கணவரும் பிரபல தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர் கலந்து கொண்டிருந்தார். அப்போது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கு நடிகை வித்யா பாலன் சேலை முந்தானை ஒரு பொருளில் சிக்கி இருக்கிறது. முந்தானை அவிழ்ந்த நிலையில் அவர் உடனடியாக முந்தானையை செய்து விட்டார். இந்த சம்பவம் சிவப்பு கம்பள வரவேற்பில் நடந்ததால் பலரும் வீடியோ எடுத்திருந்தனர். தற்போது இந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full