சரவண பவன்ல அதெல்லாம் கிடைக்காது - Ak62 குறித்து பேசிய விக்கி (குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி ஆகிடுமோ)

By Arun · 2/5/2022

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. அதோடு இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

மேலும், படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் வசூல் 300 கோடியை நெருங்கி சென்று இருந்ததாக தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள்.

ஏகே 61’ படம் பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதோடு இந்த படத்தின் சூட்டிங்கை ஜூலை மாதத்திற்குள் முடிக்க இருப்பதால் படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. படத்தில் பிற நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி:

இதைத்தொடர்ந்து அஜித்தின் 'ஏகே 62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற பாடலையும், வலிமை படத்தில் நாங்க வேற மாதிரி, அம்மா என்ற பாடலையும் எழுதி இருக்கிறார். தற்போது இவர் அஜீத்தை வைத்து படம் இயக்க இருக்கிறார்.

'ஏகே 62' படம் பற்றிய தகவல்:

சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏகே 62 படம் குறித்து விக்னேஷ் சிவன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த கதையை மூன்று ஆண்டுகளாக உருவாக்கி வந்தது. ஆனால், படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் ரசிகர்கள் பார்க்க வந்தால் அவர்களுக்கு சிறப்பான அனுபவம் காத்திருக்கு. ஒரு படத்தை படமாக எதிர் கொண்டால் மட்டுமே அந்த படம் நிறைவான அனுபவத்தை கொடுக்கும்.

ஏகே 62 குறித்து விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

சரவண பவனில் நான்வெஜ் கிடைக்காது, அஞ்சப்பரில் நான் வெஜ்தான் கிடைக்கும். ஒரு படம் குறித்த எதிர்பார்ப்பை மனதில் பதிந்து கொள்ளாமல் திறந்த மனதுடன் படத்தை எதிர்கொண்டால் அனைத்து படங்களும் சிறப்பாகவே அமையும். அஜித் சாரின் படத்திற்காக என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன். அஜித் சாருடன் 9 மணி முதல் 6 மணி வரை இணைந்து பணிபுரிய உள்ளதே எனக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தான் என்ஜாய் செய்ய இருக்கிறேன். அதே நேரத்தில் அஜித் ரசிகர்கள், பொதுவான ரசிகர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full