நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் - இத்தன கோடியா
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கோலிவுட், பாலிவுட் என பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் நயன் நடிப்பில் வெளியாகி இருந்த டெஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் மாதவன்-சித்தார்த் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து இருந்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இதை அடுத்து தற்போது நயன் அவர்கள் சீரஞ்சீவியின் 157வது படத்தில் கமிட்டாகி இருக்கிறார். பின் வேறு மொழி படங்களிலும் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு நயன் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
நயன்தரா குடும்பம்:
இதற்கிடையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்து, கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விக்கி- நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. வாடகை தாய் மூலம் தான் இந்த குழந்தையை பெற்று எடுத்து இருந்தார்கள். குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் பிசியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன் பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.
நயன் பிறந்தநாள்:
அதேபோல் விக்னேஷ் சிவனும் சினிமாவில் பிசியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நயன்தாரா தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நயன் பிறந்தநாளை முன்னிட்டு இவர் படம் தொடர்பான அப்டேடுகளும் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய காதல் மனைவிக்கு விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் காஸ்ட்லி பரிசுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு:
அதாவது, நயன் பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்ற விலை உயர்ந்த காரை தான் விக்னேஷ் சிவன் பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த காரினுடைய விலை 10 கோடி இருக்கும். இதில் தன்னுடைய இரண்டு மகன்களையும் அமர வைத்து குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்,
எண்ணம் போல் வாழ்க்கை. என்னுடைய உயிர், நயன்தாராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீ பிறந்த தினம் வரம். என்னுடைய அழகியே உன்னை உண்மையாக ஆழமாக காதலிக்கிறேன். சிறந்த தருணங்களை மட்டும் தர வேண்டும் என கடவுளையும் இந்த பிரபஞ்சத்தையும் வேண்டுகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.