'அஜித் கை கழுவும் புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் போட்ட reaction' - கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

By Arun · 17/1/2023

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிகர் மட்டும் அல்லாமல் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மிகவும் ஆர்வமிக்க ஒரு ரேசர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான் அதிலும் காரைவிட இவருக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும் அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே பைக்கில் பல்வேறு நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் அஜித் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி வருகிறது.

சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார். இப்படி அஜித் உடைய எதாவது ஒரு அன்சீன் புகைப்படம் கிடைத்தால் போதும் அதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இதை தொடர்ந்து லடாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கும் பைக் சாகச பயணங்களை மேற்கொண்டுவந்தார் அஜித்.

மேலும், அந்த பயணத்தின் போது இவருடன் துணிவு பட கதாநாயகி மஞ்சு வாரியரும் பைக் ரைடு செய்திருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள புத்தர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த அவர், பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதே போல அஜித் லடாக்கில் பைக் பயணம் செய்து வருகிறார் என்ற செய்தியை அறிந்தவுடன் அங்கு பைக் பயணம் செய்த பல அஜித் ரசிகர்கள் அஜித்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கி வந்தனர்.

மேலும், ஒரு சில ரசிகர்கள் அஜித்தை சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். துணிவு படத்தின் படப்பிடிப்புகள் நடந்த போதே அஜித்தன்னுடைய தாய்லாந்து ட்ரிப்பை முடித்துவிட்டு மீண்டும் துணிவு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். தற்போது துணிவு படம் முடிந்த பின்னர் மீண்டும் தனது பைக் பயணத்தை தொடர இருக்கிறார். சமீப காலமாக அஜித்தின் பைக் பயண புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் ஒரு தொட்டியில் இருக்கும் குழாயில் கை கழுவும் புகைப்படத்தை பகிர்ந்து சில எமோஜிக்களையும் போட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்டு பலரும் நடிகர்கள் சாதாரணமாக செய்யும் விஷயத்தில் கூட இப்படி பெரிது படுத்த வேண்டாம், தன்னுடைய கையை கழுவுவது சிம்பிளிசிட்டியா ? இது அனைவரும் தான் செய்வார்கள் என்று விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க இருக்கிறார். விக்னேஷ் சிவன் இறுதியாக விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி இருந்தார். மேலும், இதுவரை சூர்யா, விஜய் சேதுபதி என்று இயக்கிய விஜய் சேதுபதி தற்போது தான் ஒரு உச்ச நட்சத்திரமான அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித் படத்தை இயக்க இருக்கும் நேரத்தில் விக்னேஷ் சிவன் அஜித்துக்கு சொம்பு தூக்குவது போல அவர் கை கழுவும் புகைப்படத்தை எல்லாம் போட்டு வாருவதை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ஹாட் புகைப்படங்களை வெளியிடும் பக்கத்தை எல்லாம் லைக் செய்து ரசிகர்களின் Trollகளுக்கு உள்ளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full