நயன் எங்கே, நயன் எங்கே.! விக்னேஷ் சிவனை குடைந்தெடுத்த ரசிகர்கள்.!

By Rajkumar · 16/5/2019

தமிழில் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய படங்களை விட இவருக்கு மிகப் பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது நடிகை நயன்தாரா தான். நானும் ரவுடிதான் படத்தில் இருந்து நடிகை நயன்தாரா உடன் காதலில் இருந்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

https://www.instagram.com/p/BxctKMWARpD/

இயக்குனர் விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். விக்னேஷ் சிவன் எங்கு சென்றாலும் தனது காதலியான நயன்தாராவுடன் தான் செல்வார் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். ஆனால், தற்போது நயன்தாரா சூட்டிங்கில் பிஸியாக இருந்த வருவதால் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தற்போது சர்வதேச திரைப்பட விழாவான கென்னாஸ் பிலிம் பெஸ்டிவல் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இதில் பல இந்திய திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் போது ஏ ஆர் ரகுமான் சந்தித்த விக்னேஷ் சிவன் அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

https://www.instagram.com/p/BxhG476gt7X/

மேலும் இந்த விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன் அந்த வகையில் இந்த விழாவில் அவர் எடுத்து வரும் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும்அதற்கு ரசிகர்களின் ஒரே கமெண்ட் இதுநாள் வரை எங்கு சென்றாலும் நயன்தாராவுடன் செல்வீர்கள் இப்போது ஏன் தனியாக சென்று உள்ளீர்கள் நயன்தாரா எங்கே என்று கேட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full