STR சார், நயன்தாரா Mam - 6 வருடத்திற்கு முன் சிம்பு நயன் கெமிஸ்ட்ரி குறித்து தற்போதைய காதலர் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.

By Rajkumar · 25/2/2021

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே அதேபோல நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு முன்னதாக சிம்புவையும் பிரபுதேவாவை காதலித்து வந்தார் ஆனால் அவர்கள் இருவருடனும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த இரண்டு காரணமே தோல்வி அடைந்தது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். ஆனால் சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன்தாரா விக்னேஷ் சிவனின் காதல் ஜோடிகள் தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அதற்கு முக்கிய காரணமே நயன்தாராவின் கடந்த இரண்டு காதலை விட தற்போது விக்னேஷ் சிவன் உடனான காதல் தான் அதிக ஆண்டுகள் நீடித்து வருகிறது. . இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் இருவருமே இதுவரை திருமணம் குறித்து கொஞ்சம் கூட தகவலை வெளியிடாமல் தான் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காதல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய நயன்தாரா. தனது முன்னாள்அதில், 'நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதேபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்'' என கூறி இருந்தார். அதே போல சிம்புவுடனான காதல் முறிவிற்கும் பின்னரும் இது நம்மாளு படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, இந்த படம் வெளியான போது விக்னேஷ் சிவன், பதிவிட்ட பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில், என்னுடைய இரண்டு பேவரையட் நபர்கள். str சார் நயன்தாரா மேம் கெமிஸ்ட்ரி 100/100 #SureShotSuccess என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full