மகன் செய்த செயலை வெளியிட்டு நெகிழ்ந்த விக்னேஷ் சிவன். என்ன செய்துள்ளார் பாருங்க.

By Rajkumar · 18/10/2022

தன் மகன் செய்த விஷயத்தை நினைத்து கனவு நனவானதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான்.மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். அதன் பின் தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம்.எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இருந்தாலும், ஒரு சிலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. மேலும், இவர்கள் இருவரும் சட்டத்தை முறையாக பின்பற்றி தான் வாடகை தாய் குழந்தை பெற்றுடுத்தனரா? என்று பலருமே கேள்வி எழுப்ப தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் சுப்பிரமணியம் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், இதை DMS மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது.அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தான் குழந்தை பெற்றிருக்கிறார்களா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்த பிறகு தான் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக இணை இயக்குநர் தலைமையிலான குழு விசாரணையை துவங்கியுள்ளது. மருத்தவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் விசாரணை முடிந்த பிறகு தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார். மேலும், நயன்தாரா வாடகை தாய் பெற்றுக்கொள்ள உதவிய மருத்துவமனையை கண்டுபிடித்துவிட்டதாகவும் கூறி இருந்தார். இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துவிட்டதாகவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதே வாடகைதாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்களாம்.

மேலும், ஜூன் மாதம் தான் வாடகை தாய் சட்டம் வந்ததால் தங்களை அந்த சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் நயன் தரப்பு ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளனர்.இதன் மூலம் வாடகை தாய் சர்ச்சைகளுக்கு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி முற்றுப்புள்ளி வைத்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் தனது மகன் தன் மீது சிறுநீர் கழித்துள்ள அடையாளத்தை பகிர்ந்து உள்ள அவர், தனது கனவு நனவாகி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full