அஜித் நடிக்கவுள்ள AK62வில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுகிறார் என்று பரவிய தகவலை அடுத்து ரசிகர் ஒருவர் அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கும் விதம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி விஜய் நடித்துள்ளார் “வாரிசு” திரைப்படத்துடன் ஒன்றாக வெளியானது.

இப்படம் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதோடு படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். மேலும் வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்கு இடையே யார் அதிகம் வசூல் செய்தார் என்றது பெரும் சர்ச்சையாகவே மாறியது. இதில் இரு தரப்பு படக்குழுவினரும் தங்களுடைய படம் தான் இந்த பொங்கலின் வெற்றியாளர் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

அஜித்தின் AK 62 :

இந்த நிலையில் தான் அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வீரம், கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு சந்தானம் நடிக்க இருகிறார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச தொடங்கியுள்ளன.

மேலும் இப்படத்தில் சந்தானம் காமெடியனாக மட்டும் நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

Advertisement

AK62வில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் :

இப்படிப்பட்ட நிலையில் தான் ஆஜித் நடிக்க இருக்கும் AK 62 படத்தில் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இந்த படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவம் விளக்குவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை இயக்குவதற்கு விக்னேஷ் சிவமிற்கு பதிலாக விஷ்னுவர்தான் அல்லது யாரேனும் பெரிய இயக்குனர் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரவிய நிலையில் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement

அன்றும் இதேதான் நடந்தது :

மேலும் இதே போன்று தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருந்த படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்தார்களாம். ஆனால் இதே காரணத்தினால் தான் அந்த படமும் கைவிடப்பட்டதாம். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி AK62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருபதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த கதை விஜய்யுடையது என்றும் அதனை அஜித் நடிப்பதற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆறுதல் கூறிய ரசிகர் :

இந்த நிலையில் விக்னேஷ் சிவனிடம் இருந்து படம் கைநழுவி போனதற்கு ரசிகர் ஒருவர் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் ஆறுதல் கூறு காட்சியை பகிர்ந்து இதில் இருப்பது நீங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை இயக்குனர் விக்னேஷ் விவனும் லைக் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் AK62வில் இருந்து முழுவதுமாக விலகுவதை அவரே உறுதிபடுத்தி உள்ளாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement