எனக்கு குழுந்தை இல்லனு அவனை சொந்த புள்ள போல வளத்தோம், ஆனா - விக்கி நயன் திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பெரியப்பா.

By Rajkumar · 10/5/2022

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நபர் மனவேதனையுடன் பேட்டி அளித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனிடையே விக்னேஷ் சிவன்- நயனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள். நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குகிறார்.

அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணி:

சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன்- நயன்தராவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக விக்னேஷ் சிவனின் உறவினர் மாணிக்கம் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

மாணிக்கம் அளித்த பேட்டி:

நடிகர் விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் லால்குடி. சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி தம்பதிக்கு விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. நான் விக்னேஷ் சிவனின் பெரியப்பா. என் பெயர் மாணிக்கம். எங்களுக்கு குழந்தை இல்லை. ஆகையால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் எங்களுடைய சொந்த குழந்தை போல் வளர்த்து இருந்தோம். ஆனால், பணிமாற்றம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய், தந்தை இருவரும் கடந்த 1970 களிலேயே சென்னைக்கு வந்துவிட்டனர். அதன்பின் விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் எங்க குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை.

விக்னேஷ் சிவனின் பெரியப்பா மனவேதனைக்கு காரணம்:

மேலும், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கும் எங்களை அழைக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. தற்போது விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்யப்போகிறார். இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பும் கொடுக்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் விக்னேஷ் சிவன் எங்களது மகன். எங்கிருந்தாலும் அவன் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை என்று விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் வருத்தத்துடன் கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full