வலிமை படத்தில் சம்பளமே வாங்காமல் வேலை செய்துள்ள பிரபலம் - யார் பாருங்க.
அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் சம்பளமே வாங்காமல் பணியாற்றி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அஜித் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படம் வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
ஒரு வருட காத்திருப்பு :
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிய நிலையிலும் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.
அடுத்தடுத்து வெளியான அப்டேட் :
இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோ பாடல்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளியன்று வெளியாகாமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
பாடல் ஆசிரியர் விக்னேஷ் சிவன் :
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இருந்து வெளியான வேற மாறி பாடலும், அம்மா செண்டிமெண்ட் பாடலும் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்த இரண்டு பாடல்களையும் எழுதியது வேறு யாரும் இல்லை பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் தான். இயக்குனர் விக்னேஷ் சிவன் பல பாடல்களை எழுதி இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் வாகிய சம்பளம் :
இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் தான். இந்த நிலையில் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய இரண்டு பாடல்களுக்கும் அவர் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்று வலிமை படத்தின் இயக்குனர் வினோத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவலால் அஜித்தின் ரசிகர்கள் பலர் விக்னேஷ் சிவனை புகழ்ந்து வருகின்றனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் :
இயக்குனர் விக்னேஷ் சிவன் இறுதியாக 2018 ஆம் ஆண்டு 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு வெளியான 'பாவக் கதைகள்' அந்தாலஜியில் 'லவ் பண்ணா உட்டுரனும்' என்ற சீரிஸ்சை இயக்கி இருந்தார். தற்போது இவர் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.