ஒரு வழியாக சிவா,வினோத்தை விட்ட அஜித் - Ak62 இயக்குனர் யார் தெரியுமா ? இதிலும் V செண்டிமெண்ட்ட விடல போல.

By Arun · 15/3/2022

அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் சிலவாரங்களுக்கு முன் ரிலீசானது. இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது.இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது அஜித் எப்படி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. மேலும், படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

வலிமை படத்தின் வெற்றி :

அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது.வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். ‘ஏகே 61’ மும்முரமாக முதல்கட்ட வேலைகள் சென்று கொண்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் தற்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வினோத் இயக்கத்தில் வல்லமை :

அதுமட்டும் இல்லாமல் வலிமை படம் ஐந்து மொழிகளில் வெளியானதை போல இந்த படத்தையும் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் V செண்டிமெண்ட் :

மேலும், இந்த படத்தின் டைட்டில் 'வல்லமை' என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே அஜித்தின் திரைப்படங்கள் வீரம், விவேகம், விசுவாசம், வலிமை என்று V சென்டிமென்டில் வந்துகொண்டிருக்கின்றது. அதே வரிசையில் தற்போது வல்லமை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் Ak62 படத்தின் அப்டேட் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

Ak62 படத்தின் தகவல் :

சிவாவை தொடர்ந்து 3 படங்களில் வினோத்துடன் பணியாற்றிய அஜித் தற்போது அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்றே கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full