வாரிசு படம் வெற்றிபெற வேண்டி 108 தோப்புக்கரணம் போட்டு விஜய் ரசிகர்கள் தூதன முறையில் பிராத்தனை.

By Manikandan · 8/1/2023

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படமான வாரிசு வரும் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜயின் வாரிசு படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் விஜய் ரசிகர்கள் நூதன முறையில் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாரிசு, துணிவு :

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவர் நடித்த வாரிசு மற்றும் துணிவு படங்கள் இரண்டும் வரும் 11 ஆம் தேதி மோதிக்கொள்ள இருக்கின்றன. இதனால் படத்தின் அறிவிப்பு வெளியான நேரத்தில் இருந்தே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. பொதுவான சினிமா ரசிகர்கள் இரு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்று கூறிவந்தாலும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் வழக்கம் போல மோதல்கள் ஏற்பாடுதான் வருகிறது.

விமர்சனங்கள் :

வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் முதலில் வெளியாகிய நிலையில் அவை பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு பாடலின் மீது ட்ரோல்களும் சோசியல் மீடியாவில் விமர்சனங்களும் வந்தபடியாக இருந்தது. பின்னர் அஜித் நடித்த துணிவு படத்தின் பாடல்களும் டிரைலரும் பெரியாகி இருந்தது. ஆனால் பாடல்களும் படத்தின் ட்ரைலரும் விஜய் முன்னதாக நடித்த பேஸ்ட் படத்தை போன்று இருக்கிறது என்று ரசிகர்கள் கேலி செய்து வந்தனர்.

ப்ரோமோஷன்ஸ் :

இந்த நிலையில் இரு படக்குழுவினரும் அவரவர் படங்களை ப்ரோமோஷன் செய்வதில் குறியாக உள்ளனர். குறிப்பாக வாரிசு இசை வெளியிட்டு விழா, துணிவு படத்திற்கு வானத்தில் இருந்து போஸ்டருடன் குதிப்பது என இருந்து வந்தனர். ரசிகர்களும் கடலுக்கடியில் போஸ்டர் வைப்பது, பழனிக்கு காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, போஸ்டர் அடிப்பது என இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெற்றிபெற வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் தூதன பித்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

108 தோப்புக்கரணம் :

அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயூரநாதர் ஆலயத்தில் இன்று விஜய் ரசிகர்கள் அங்குள்ள அபயாம்பிகை அம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக பிராத்தனைகள் நடைபெற்றனர். அதில் கலந்து கொண்ட ரசிகர்கள் விநாயகர் சன்னதியில் 108 தோப்புக்கரணம் போட்டு விநோத பிராத்தனையில் ஈடுபட்டனர். மேலும் இதற்கு பிறகு அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு விஜயின் வாரிசு வெற்றிபெற வேண்டும் என்று பிராத்தனை செய்த்தனர். மேலும் விஜய் மற்றும் அஜித்தின் இரு பாடங்களும் ஒரே நாளில் வரும் 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் எதிர்பார்ப்பு இமயத்தை தொட்டுள்ளது.

behindtalkies AMP · Quick view
View full