ரஜினியை மிஞ்சிய விஜய்.! விஜய் 63 படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடியா.!

By Rajkumar · 29/4/2019

சர்கார் படத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது 'விஜய்63 'பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார். மெர்சல், தெறி படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்துள்ளார் விஜய். 
ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் விவேக் நீண்ட இடைவேளைக்கு பின்னர் விஜயுடன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே வெளியாவதற்கு முன்பாகவேய வெளியீட்டு உரிமம் பல கோடிகளுக்கு விற்று தீர்ந்து விடும் . இறுதியாக வெளியான சர்கார் படம் கூட ஓவர் சீஸ் வியாபாரத்தில் பல கோடிக்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விஜய் 63 படத்தின் உரிமையை பெற பல்வேறு நிறுவனம் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் தளபதி-63 உலகம் முழுவதும் ரூ 200 கோடி வரை வியாபாரம் செய்யும் என சில பிரபல திரைப்பிரபலங்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் ஓவர்சீஸ் விளம்பரத்தில் ரஜினியை மிஞ்சியுள்ளார் விஜய்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full