சர்கார் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ‘விஜய்63’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய்யின் ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற படங்களை இயக்கிய அட்லீ இயக்க ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், காமெடி நடிகர்களாக யோகி பாபு, விவேக்கும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இதையும் பாருங்க : விஜய் 63 படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியான யோகி பாபுவின் புகைப்படம்.! செம கெட்டப் போங்க.!

Advertisement

கடந்த மாதம் 21-ம் தேதி சென்னை பின்னி மில்லில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு வரும் நடிகர் விஜயைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு பணிகளை தொடர்வதில் இடையூறு ஏற்பட்டதாகவும், இடையூறுகள் இல்லாமல் படப்பிடிப்பு பணிகளை தொடர்வதற்காக இடத்தை மாற்றுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இதுகுறித்து பட குழுவின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்த போது, விஜய் 63 படம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் படபிடிப்பு இடத்தை மாற்ற தற்போதைக்கு எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் ஆணித்தனமாக தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement