பூஜையுடன் துவங்கியது விஜய் 63.! வெளியான எக்ஸ்லுசிவ் புகைப்படங்கள்.!

By Rajkumar · 20/1/2019

தெறி,மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீ மற்றும் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். பெயரிடபடாத இந்த புதிய படம் ‘விஜய்63’ என்றழைக்கபடுகிறது. ஏ ஜி எஸ் நிருவனம்தயாரிக்கும் இந்த புதிய படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் கால் பந்து பயிற்சியாளராக நடிக்கவுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்க மெர்சல், ஏ போன்ற படங்களில் பாடலாசிரியராக பணிபுரிந்த விவேக் பாடல் எழுதவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று (ஜனவரி 20)சென்னையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்து முடிந்துள்ளது.

மேலும், நாளை ஜனவரி 21-ம் தேதி முதல் படப்பிடிப்புப் பணிகள் தொடங்க தேதி நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வட சென்னை பகுதியை மையபடுத்தி எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் படத்தின் செட் வட சென்னை பகுதிகளில் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full