விஜய் 63 படப்பிடிப்பு பற்றி வெளியான புதிய தகவல்.! அடுத்து இங்கு தான் ஷூட்.!

By Rajkumar · 31/1/2019

சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஜய்மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

விஜய் 63 படத்திற்காக வின்னி மில்லில் தற்போது செட் அமைக்கபட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இதனால் தினமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோகளும், புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது. 

ரசிகர்களின் வருகையால் தினமும் படபிடிப்பு சற்று தாமதமாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்யின் கெட் அப் தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய்யின் கெட்டப் விடுமோ என்று படக்குழு குழப்பத்தில இருந்து வந்தனர். 

இதனால் பின்னி மில்லில் படப்பிடிப்பை விரைந்து முடிக்க படப்பிடிப்பு திட்டமிட்டு வருகின்றனர். மேலும்,
இங்கு படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து அடுத்தகட்டமாக படக்குழு டெல்லி செல்கிறார்களாம். அங்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full