தளபதி 65 படத்துக்கு அப்புறம் கே.ஜி.எப் சண்டைக் காட்சிகளை மறந்துவிடுவீங்க - வேற லெவல் சம்பவம். வீடியோ இதோ.

By Rajkumar · 24/2/2021

சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

https://twitter.com/Thalapathy65Off/status/1364208424360153088

ஆனால், தற்போது 'தளபதி 65' படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர். இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர்.

அதுபோக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தளபதி 65 படத்தை நெல்சன் இயக்குனராகவும் மற்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த தகவலைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் குறித்த தகவல் ஒன்று இணையத்தி வெளியாகி, விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

https://twitter.com/Thalapathy65Off/status/1364216585234227202

தளபதி 65 படத்திற்குப் பிறகு கே.ஜி.எப் படத்தின் சண்டைக் காட்சியை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்றும் அந்தளவுக்கு விஜய்யின் தளபதி 65 படம் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும், அன்பறிவ் குழுவில் இடம்பெற்றுள்ள திலீப் குமார் தெரிவித்துள்ள வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.தளபதி 65 படத்தில் சண்டை இயக்குநர்களாக இரட்டையர்கள் அன்பறிவ் பணியாற்றுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மெட்ராஸ், கபாலி, கைதி போன்ற படங்களில் பணியாற்றிய இவர்கள், கே.ஜி.எப் 1 படத்திலும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full