'Vijay 65' - சன் பிக்சசர்ஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு. இயக்குனர் யார் தெரியுமா ?

By Rajkumar · 10/12/2020

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளது இந்த திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=JO9B7aSgZOk&feature=youtu.be

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது 'தளபதி 65' படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஒரு மிகப்பெரிய அப் டேட் இருக்கிறது என்று அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை பார்த்ததுமே இது கண்டிப்பாக விஜய் 65 படத்தின் அப்டேட்டாக தான் இருக்கும் என்று யூகித்த ரசிகர்கள் தளபதி65 என்ற ஹேஷ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்ய துவங்கினர் இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல சன் பிக்சர்ஸ் தளபதி 65 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்க இருக்கிறார். விஜய் நெல்சனுடன் இணைய முக்கிய காரணமே விஜய், எப்போதும் மாஸ் பஞ்ச் வசனமும், வில்லன்களை பந்தாடுவது, டான்ஸ் கில்லி என்று ஒரு ட்ராக்கில் போய் கொண்டு உள்ளவர். ஒரு வேலை ஒரே மாதிரி டிராக்கில் போய்க் கொண்டிருப்பது கூடாது என்பதற்காகத் தான் இப்படி ஒரு புதிய பிரெஷ்ஷான கூட்டணியில் இணைந்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full